கடந்த ஓராண்டில் மட்டும் ஒரு கோடி வேலைவாய்ப்புகள் - பிரதமர் நரேந்திர மோடி
பதிவு : ஆகஸ்ட் 12, 2018, 12:00 PM
கடந்த ஓராண்டில் மட்டும் ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த ஓராண்டில் மட்டும் ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, எந்தவொரு இந்திய குடிமகனும் நாட்டை விட்டு வெளியேறும் நிலை வராது என்றார். கடந்த ஓராண்டில் மட்டும் ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும்,  வேலைவாய்ப்பு உருவாக்கப்படவில்லை எனற பிரச்சாரத்துக்கு இது முற்றுப்புள்ளி வைக்கும் எனவும் அவர் கூறினார். 

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் அடித்துக் கொலை செய்வது போன்ற பிரச்சினைகளில் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் செயல்பட முன்வர வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.

பா.ஜ.க. கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள் நம்பிக்கையை இழந்து வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டு தவறு என திட்டவட்டமாக பிரதமர் மறுத்தார். அண்மையில் அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததும், மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலும் அதற்கு சாட்சி என்றும் விளக்கமளித்தார். தற்போது தங்கள் கூட்டணியில் இல்லாத கட்சிகளும் தங்களுக்கு ஆதரவளித்து வருகின்றன என்றும் பிரதமர் மோடி கூறினார்.

மக்களவையில் ராகுல்காந்தி தம்மை கட்டித் தழுவிய செயல் குழந்தைத்தனமானதா? இல்லையா? என்பதை மக்கள் முடிவுக்கே விட்டு விடுவதாகவும், முடிவெடுக்க முடியாத நிலையில், அவர் கண் சிமிட்டியதை பார்த்தாலே பதில் கிடைக்கும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"எதிர்கட்சி பணியை கூட காங்கிரஸ் சரியாக நிறைவேற்றவில்லை" - பிரதமர் மோடி

எதிர்க்கட்சி பணியை கூட காங்கிரசால் சரியாக நிறைவேற்ற முடியவில்லை என பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

130 views

நேபாள சுற்றுப்பயணம் முடித்து திரும்பினார் மோடி

இதையடுத்து, நேபாளத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு டெல்லிக்கு பிரதமர் மோடி திரும்பினார்.

70 views

" 4 ஆண்டுகளில் 50 ஆண்டு பணி " பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம்

"முத்தலாக் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் முகம் தெரிந்து விட்டது" - பிரதமர் மோடி குற்றச்சாட்டு"

577 views

சத்தீஸ்கரில் பிரதமர் மோடி சுற்றுப் பயணம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை, பிரதமர் மோடி திறந்து வைத்தார்

118 views

பிற செய்திகள்

எம்.எல்.ஏ., மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ., கொலை வழக்கு - மாவோயிஸ்ட்களின் புகைப்படம் வெளியீடு...

ஆந்திராவில் எம்எல்ஏ மற்றும் முன்னாள் எம்எல்ஏ-வை சுட்டுக்கொன்ற 3 மாவோஸ்டுகளின் புகைப்படத்தை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

173 views

ரபேல் ஒப்பந்தம்: அனில் அம்பானியை பரிந்துரை செய்தது ஏன்..? - ராகுல் காந்தி கேள்வி

தேசத்தின் பாதுகாவலர் என தம்மை கூறிக் கொள்ளும் பிரதமர் மோடி, ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் அனில் அம்பானியை பரிந்துரை செய்தது ஏன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

44 views

2019-ல் நாடாளுமன்ற தேர்தல்: கூட்டணி குறித்து காங்கிரஸ் உயர்மட்ட குழு ஆலோசனை

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் டெல்லியில் 2 நாட்கள் நடைபெறுகிறது.

38 views

ரபேல் போர் விமான விவகாரம்: மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தில் காங்கிரஸ் மனு

ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் தொடர்பாக, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி, காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

18 views

இந்திய கம்யூ. கட்சி நிர்வாகிக்கு கத்தி குத்து

புதுச்சேரி மாநில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், கட்சி பிரமுகர் ஒருவரை அடையாளம் தெரியாத நபர் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினார்.

10 views

எம்.எல்.ஏ.க்களின் இரட்டைப் பதவி விவகாரம்: எம்.எல்.ஏ.க்கள் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

இரட்டை ஆதாயம் தரக்கூடிய பதவிகளை வகிக்கும், புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேர் பதிலளிக்க, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

75 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.