ஜார்கண்ட்டில் 56 குழந்தைகள் விற்கப்பட்ட விவகாரம் : நடவடிக்கை எடுக்க பரிந்துரை

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 56 குழந்தைகள் முறைகேடாக விற்கப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு, தேசிய குழந்தைகள் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
ஜார்கண்ட்டில் 56 குழந்தைகள் விற்கப்பட்ட விவகாரம் : நடவடிக்கை எடுக்க பரிந்துரை
x
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் கிறிஸ்துவ அமைப்பு சார்பில் செயல்பட்டு வந்த காப்பகத்தில், 56 குழந்தைகள் முறைகேடாக விற்கப்பட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தியதில், 4 குழந்தைகள் மீட்கப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நடத்திய விசாரணையில், கடந்த 2014ஆம் ஆண்டு ஆய்வு நடத்தச் சென்ற மாவட்ட குழந்தைகள நல ஆணையர் மிரட்டப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த அமைப்பு மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு, தேசிய குழந்தைகள் ஆணையம், மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்