கேரள கலாச்சாரத்துடன் ஒன்றிய யானைகள்

ஆடித்திருவிழாவை முன்னிட்டு கேரளாவில் யானையூட்டு திருவிழா நடைபெற்று வரும் நிலையில் கேரள மக்களுக்கும் யானைகளுக்கும் உள்ள உறவை பற்றிய செய்தி தொகுப்பு.
கேரள கலாச்சாரத்துடன் ஒன்றிய யானைகள்
x
* கேரளா என்றாலே யானைகள் தான் நினைவுக்கு வருகிறது.கோயில் திருவிழாக்கள் தான் என்றில்லை அரசு நிகழ்ச்சிகள், மற்றும் மத விழாக்கள்  என அனைத்திலும்  யானைகளை அலங்கரித்துக் கொண்டுவந்து நிறுத்திவிடுகிறார்கள்.கேரளாவில் மட்டும் 700க்கும் அதிகமான யானைகள் உள்ளன.

* குருவாயூர் கோவிலின் கேசவன் என்ற யானை மிகவும் புகழ்பெற்றது. அந்த யானை இறந்துவிட்ட நிலையில், தற்போதும் கூட யானைக்கு சிலை வைத்து வழிபட்டு வருகின்றனர் கேரள மக்கள்... குருவாயூர் கேசவன் யானையை மையமாக வைத்து திரைப்படங்களும் வந்துள்ளன.


* இன்றும் குருவாயூர் கோவிலில் 60 க்கும் அதிகமான யானைகளை  பராமரித்து வருகின்றனர்.இது தவிர,பளு தூக்கும் வேலைகளுக்காகவும், மர தொழிற்சாலைகளிலும் யானைகள் முக்கிய பங்கு வகிப்பதால், அதற்காகவும், கேரள மக்கள் யானைகள் வளர்த்து வருகின்றனர். திருவிழாக்காலங்களில் யானைகள் அனைத்தும் அலங்கரிக்கப்பட்டு, ஊர்வலத்தில் சாமிகளை சுமந்து செல்ல பயன்படுத்தப்படுகின்றன.


* இதில் குறிப்பிடத்தக்க திருவிழா ஆடி மாத யானையூட்டு.திருச்சூர் வடக்கு நாதர் கோவிலில் இந்த திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்... ஆடி மாத்ததில் யானைகள் அனைத்தையும் வரிசையாக நிற்க வைத்து,பக்தர்கள் அவற்றிற்கு உணவளித்து மகிழ்வர்.


* பல திருவிழாக்காலங்களில், யானைகள் கட்டுப்பாட்டை இழந்து மதம் பிடித்து, பாகன்களையும், பொதுமக்களையும் தாக்கும் நிகழ்வுகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.ஆனாலும், கேரள மக்களின் கலாச்சாரத்துடன் ஒன்றிணைந்த யானைகளிடம் இருந்து அவர்கள் விலகி போக விரும்பவில்லை.தற்போது வரை கேரளா திருவிழாக்களில், யானைகள் தான் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று திருவிழாக்களை அலங்கரித்து வருகின்றன.

Next Story

மேலும் செய்திகள்