புதுச்சேரியில் காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் 6 பேர் கைது - மேலும் 6 பேருக்கு வலை
பதிவு : ஆகஸ்ட் 02, 2018, 12:11 PM
புதுச்சேரியில் காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மேலும் ஆறு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்
காலாப்பட்டு பகுதியை சேர்ந்த ஜோசப் என்பவர் காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட துணை தலைவராக செயல்பட்டு வந்தார். அவர், காலாப்பட்டிலிருந்து புதுச்சேரிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றபோது வழிமறித்த சில மர்ம நபர்கள்  அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிசென்றனர். இதில் படுகாயமடைந்த ஜோசப் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இது  தொடர்பாக  தனிப்படை  அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த போலீசார், கொலையில் தொடர்புடைய சந்திரசேகர், செல்வகுமார், பார்த்திபன், முகுந்தராஜ், குமரேசன், ஆனந்தன் ஆகிய ஆறு பேரை கைது செய்தனர். 

இவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் ஜோசப்புக்கும் மற்றோரு காங்கிரஸ் பிரமுகர் சந்திரசேகர் என்பவருக்கும் தொழில் போட்டி இருந்ததாகவும், அதன் காரணமாகவே சந்திரசேகர் கூலி படையை வைத்து ஜோசப்பை தீர்த்து கட்டியதும் தெரிய வந்துள்ளது. இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மேலும் ஆறு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

ஆற்றங்கரையில் அரங்கேறிய படகுப் போட்டி

இங்கிலாந்தில் தட்டையான அடிப்பாகமுடைய செவ்வக வடிவிலான படகு போட்டி நடைபெற்றது.

38 views

8 வழி பசுமை சாலை திட்டப்பணிகள்- நில பரிவர்த்தனை மேற்கொள்ள தடை

8 வழி பசுமை சாலை திட்டத்துக்காக கையகப்படுத்தப்படும் பட்டா நிலங்களில் எந்தவித பரிவர்த்தனையும் மேற்கொள்ள தடை விதித்து உத்தரவிட்டுள்ளதால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக நில உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

1945 views

ஹெலிகாப்டர் தரையிறங்க முயற்சித்த போது விபத்து

சீனாவின் பீஜிங்கில் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் ஒன்று வானில் வட்டமிட்டபடியே சுழன்று கீழே விழும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

1781 views

ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை - டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமின் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார்.

180 views

செல்பி எடுத்த போது கடலில் தவறி விழுந்த இளைஞர் - 3 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு

பாறை மீது நின்றபடி செல்பி எடுக்க முயன்ற போது தடுமாறி கடலுக்குள் விழுந்தார்

1680 views

பிற செய்திகள்

நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி

பெருமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் ரூபாய் பத்து லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார்.

38 views

கேரள வெள்ளத்தில் இருந்து குழந்தையை காப்பாற்றிய வீரர்

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் வெள்ள மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள தேசியப் பேரிடர் மீட்புப் படை வீரர் ஒருவருக்கு மக்களின் பாராட்டுகள் குவிகின்றன.

182 views

நிவாரண பொருள்களை தோளில் சுமந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்

எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நள்ளிரவில் கொண்டு செல்லப்பட்ட நிவாரணப்பொருட்களை தோளில் சுமந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பாராட்டு குவிகிறது.

302 views

ஆளுநர் மாளிகையில் நீதிபதிகளுக்கு முறையாக இருக்கை ஒதுக்கவில்லை- ஆளுநர் பன்வாரிலால் வருத்தம்

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில், நீதிபதிகளுக்கு முறையாக இருக்கை ஒதுக்கவில்லை என்ற புகார் தொடர்பாக, தலைமை நீதிபதி தஹில் ரமானியிடம் ஆளுநர் பன்வாரிலால் வருத்தம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

147 views

கேரளாவில் கனமழை காரணமாக வெளியேற முடியாமல் தவிக்கும் பொதுமக்கள்

கேரளாவில் கனமழை காரணமாக பெரும்பாலான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அங்கிருந்து பொதுமக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

156 views

மின்னல் தாக்கியதில் மீனவருக்கு கண் பார்வை இழப்பு

புதுச்சேரி மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது, பலத்த மழையின் இடையே மின்னல் தாக்கியதில் மீனவர் ஒருவர் கண் பார்வை இழந்துள்ளார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.