மோடியின் 'கட்டிப்பிடி' பாணியை பின்பற்றிய ராகுல்
பதிவு : ஜூலை 22, 2018, 08:09 PM
நாடாளுமன்றத்தில் மோடியை ராகுல் கட்டிப்பிடித்தது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு...
பிரதமரானதில் இருந்தே மோடியின் ஒவ்வொரு செயல்களும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன. மோடியின் நடவடிக்கைகளால் குதூகலம் அடைவதில் முன்னணியில் இருப்பது, சமூக வலை தளங்களில் 'மீம்ஸ்' போடுபவர்கள் தான். அதற்கு சமீபத்திய உதாரணம், மோடியின் 'யோகா' வீடியோ. இதுபோல, உலக நாடுகளின் தலைவர்களை சந்திக்கும்போது, கட்டியணைக்கும் மோடியின் வழக்கமும் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, தற்போதைய அதிபர் டிரம்ப், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, ரஷ்ய அதிபர் புதின், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், சீன அதிபர் ஜி ஜின் பிங், ஜப்பான் பிரதமர் அபே, இஸ்ரேல் அதிபர் ரியுவென் ரிவ்லின், சவுதி மன்னர், கனடா பிரதமர் என மோடியின் கட்டிப்பிடி வைத்தியத்துக்கு ஆளாகாத உலக தலைவர்களே இல்லை என கூறலாம். வெளிநாடுகளுக்கு மோடி பயணம் செல்லும்போதும் சரி, வெளிநாட்டு தலைவர்கள் இந்தியா வரும்போதும் சரி... நிச்சயமாக கட்டியணைப்பது மோடியின் வழக்கம். இதை, சமூக வலை தளத்தில் விமர்சித்திருந்த ராகுல், கட்டிப்பிடி வைத்தியம் பலனளிக்கவில்லை எனவும் கூறியிருந்தார். 

அப்போது, அதற்கு பதிலளித்த மோடி, மற்றவர்களை போல பயிற்சி பெற்றிருந்தால் கைகுலுக்கி இருப்பேன் எனவும் கட்டியணைப்பது எனது இயல்பு எனவும் கூறியிருந்தார். மேலும், தனக்கு எதிரான கருத்துகளை தனக்கு சாதகமாக மாற்றுவது தனது இயல்பு எனவும் தெரிவித்தார். இந்நிலையில், மக்களவையில் மோடியை ராகுல் கட்டி தழுவியதால் மீண்டும் 'கட்டிப்பிடி' விவாதம் தொடங்கி விட்டது. காரசாரமாக மோடியை விமர்சித்து விட்டு, அதே வேகத்தில், மோடியின் இருக்கைக்கே சென்று ராகுல் கட்டிப்பிடித்தது, 'கட்டிப்பிடி' இயல்பை கிண்டல் செய்வதாகவே கருதப்படுகிறது. 

மக்களவைக்குள் பிரதமரை  ஒருவர் கட்டிப்பிடிப்பது, நாடாளுமன்ற வரலாற்றில் இதுவே முதன்முறை. மோடியின் வழக்கத்தை அவருக்கே செய்து காட்டியதோடு, பிரியா வாரியரை போல கண் சிமிட்டியதால், நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் முக்கியமான விவாதத்தின் கவனத்தையே ராகுல் திசை திருப்பி விட்டார். மோடி ஏற்கனவே கூறியபடி, எதிரான கருத்துகளை சாதகமாக்கும் அவரது வித்தை, இந்த விஷயத்திலும் எடுபடுமா என்பது போகப் போகத்தான் தெரியும்...

தொடர்புடைய செய்திகள்

காலமானார், மத்திய அமைச்சர் அனந்தகுமார் : அனந்தகுமார் உடலுக்கு பிரதமர் அஞ்சலி

காலமானார், மத்திய அமைச்சர் அனந்தகுமார் : அனந்தகுமார் உடலுக்கு பிரதமர் அஞ்சலி

62 views

"2022 க்குள் அனைவருக்கும் வீடு நிச்சயம்" - பிரதமர் மோடி

கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு, ஒரு கோடியே 25 லட்சம் வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

459 views

" 4 ஆண்டுகளில் 50 ஆண்டு பணி " பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம்

"முத்தலாக் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் முகம் தெரிந்து விட்டது" - பிரதமர் மோடி குற்றச்சாட்டு"

648 views

சத்தீஸ்கரில் பிரதமர் மோடி சுற்றுப் பயணம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை, பிரதமர் மோடி திறந்து வைத்தார்

152 views

பிற செய்திகள்

கருணாநிதி சிலை திறப்பு விழா : தமிழகம் வருகிறார் சோனியா

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வரும் 16ஆம் தேதி தமிழகம் வருகிறார்.

14 views

நாடாளுமன்றம் முன்பு அ.தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம்...

மேகதாது அணை தொடர்பாக வரைவு திட்ட அறிக்கை தயார் செய்ய, கர்நாடகாவுக்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்துள்ள அனுமதிக்கு தமிழகம், புதுச்சேரி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

22 views

புதுச்சேரி 3 நியமன எம்.எல்.ஏக்களுக்கு இருக்கை ஒதுக்கீடு

பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு புதுச்சேரி சட்டப்பேரவையில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2 views

தெலங்கானா முதலமைச்சராக சந்திரசேகர ராவ் பதவியேற்பு

தெலங்கானா முதலமைச்சராக சந்திரசேகர ராவ், இரண்டாவது முறையாக இன்று பதவியேற்றுக் கொண்டார்.

21 views

சென்னை மாநகராட்சி டெண்டர்களில் பெரிய அளவில் ஊழல் நடைபெற்றுள்ளது - ஸ்டாலின்

சென்னை மாநகராட்சி டெண்டர்களில் ஊழல் நடைபெற்றதாக குற்றம்சாட்டியுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், லஞ்ச ஊழல் தடுப்பு துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

20 views

தினகரன் அ.ம.மு.கவை காப்பாற்ற முயற்சி செய்ய வேண்டும் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

கரைந்து செல்லும் அ.ம.மு.கவை காப்பாற்ற தினகரன் முயற்சி செய்ய வேண்டும் என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.