காஷ்மீரில் த்ரில் அனுபவத்திற்காக படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

உலகிலேயே மிக உயரமான சாலையில் சவாரி
காஷ்மீரில் த்ரில் அனுபவத்திற்காக படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்
x
காஷ்மீரில் உள்ள உலகிலேயே மிக உயரமான சாலையில் பயணிக்க சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பனிபடர்ந்த மலைகள், இதமான பருவநிலை, பசுமையான காட்சி  என இயற்கையின் அழகை ரசிக்க விரும்பும் பலர், ஜம்மு- காஷ்மீருக்கு அதிகளவில் படையெடுக்கின்றனர். அதிலும், த்ரில்லான அனுபவத்தை நாடுவோரின் தேர்வாக இருப்பது, இங்குள்ள கால்லுங் லா (Khardung La) சாலை. லே (LEH) நகரையும், நுப்ரா (NUBRA) பள்ளத்தாக்கையும் இணைக்கும் இந்த சாலை கடல்மட்டத்தில் இருந்து 17 ஆயிரத்து 582 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிக உயரமான இந்த சாலையில் த்ரில் பயணம் மேற்கொள்ள உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பலர் ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறு வரும் பயணிகள் தாங்கள் உலகின் உச்சிக்கே வந்ததாக நினைத்து புகைப்படம், செல்ஃபி  எடுத்து மகிழ்கின்றனர். பெரும்பாலானோர் கார்களில் வந்தாலும், த்ரில் அனுபவத்தை மேலும் கூட்டுவதற்காக சிலர் இருசக்கரவாகனத்திலும், சைக்கிளிலும் கூட வருகின்றனர். கடினமான மலைப்பாதை, பனிபடர்ந்த மலைகள், இதமான பருவநிலை, ரம்மியமான காட்சி உள்ளிட்டவை, மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்ச்சி அளிப்பதாக சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் கூறுகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்