நீட் தேர்வு தொடர்பான வழக்கு - சி.பி.எஸ்.இ. 4 கேள்விகளுக்கு பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

ரங்கராஜன் எம்.பி. தொடர்ந்த வழக்கில் சி.பி.எஸ்.இ.க்கு நோட்டீஸ் - 4 கேள்விகளுக்கு வரும் 6 ஆம் தேதிக்குள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு
நீட் தேர்வு தொடர்பான வழக்கு - சி.பி.எஸ்.இ. 4 கேள்விகளுக்கு பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு
x
ரங்கராஜன் எம்.பி. தொடர்ந்த வழக்கில் சி.பி.எஸ்.இ.க்கு நோட்டீஸ்

நீட் தேர்வு தொடர்பான வழக்கில், சி.பி.எஸ்.இ. அமைப்பு 4 கேள்விகளுக்கு பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

* மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வில், தமிழ் வழி  வினாத்தாளில் மொழி பெயர்ப்பு பிழைகள் அதிகமாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 49 கேள்விகளுக்கு தலா நான்கு மதிப்பெண் வீதம் 196 மதிப்பெண்கள் வழங்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி ரங்கராஜன்,  மனு தாக்கல் செய்தார். 

* இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சி.டி.செல்வம், பஷீர் அகமது அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, போட்டி என்பது அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், தமிழ் வழி மாணவர்களுக்கு தரமான கல்வி கற்றுக் கொடுக்கப்படுகிறதா என கேள்வி எழுப்பினர். இதனைத் தொடர்ந்து, 4 கேள்விகளுக்கு வரும் வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்குமாறு சி.பி.எஸ்.இ. அமைப்புக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். 

* அதன்படி, எந்த தொகுப்பில் இருந்து நீட் தேர்வுக்கு வினாக்கள் தேர்வு செய்யப்படுகின்றன என்றும், எந்த அகராதி உதவியுடன் நீட் தேர்வு வினாக்கள் ஆங்கிலத்தில் இருந்து தமிழ் மொழியில் மொழி பெயர்ப்பு செய்யப்படுகிறது எனவும், தமிழ் வழி ஆசிரியர்களுக்கு இது தொடர்பாக கொள்கை விளக்கக் குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளதா எனவும், ஆங்கிலத்தில் இருந்து தமிழ் மொழிக்கு  மொழி பெயர்ப்பதால் மாணவர்களுக்கு இரு மொழி இலக்கணம் கற்றுக் கொடுக்கப்பட்டதா எனவும் பதில் அளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 



Next Story

மேலும் செய்திகள்