கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டம் - காவிரி மேலாண்மை ஆணையம் குறித்து ஆலோசனை

காவிரி மேலாண்மை ஆணையம் விவகாரத்தில் ஏற்றுக் கொள்ள முடியாத விதிமுறைகளை எதிர்த்து போராட உள்ளதாக, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டம் - காவிரி மேலாண்மை ஆணையம் குறித்து ஆலோசனை
x
கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டம் - காவிரி மேலாண்மை ஆணையம் குறித்து ஆலோசனை



கர்நாடகாவின் டெல்டா பகுதியை சேர்ந்த அனைத்து கட்சி எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்களுடன் ஆலோசனைக் கூட்டம், குமாரசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. காவிரி மேலாண்மை ஆணையம் விவகாரத்தில், அடுத்தகட்ட முடிவு குறித்து இந்த கூட்டத்தில், விவாதிக்கப்பட்டது.  தங்கள் கருத்தைக் கேட்காமலே காவிரி மேலாண்மை ஆணையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு எதிராக குரல் கொடுப்போம் - மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் கே.டி.சிவக்குமார்



காவிரி மேலாண்மை ஆணையம் முதல் கூட்டத்தில் கர்நாடக அரசின் நிலைபாடு குறித்து எடுத்துரைக்கப்படும் என அந்த மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் கே.டி.சிவக்குமார் தெரிவித்துள்ளார். 

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது குறித்து நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டும் என்ற, தங்களது கோரிக்கையை, மத்திய அரசு நிராகரித்து விட்டதாக கூறினார்.  காவிரி ஆணையத்தில், 2 உறுப்பினர்களை நியமித்துள்ளதாகவும், அவர்கள் வருகிற இரண்டாம் தேதி நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணையம் முதல் கூட்டத்தில் கர்நாடக அரசின் நிலைபாடு குறித்து குரல் எழுப்புவார்கள் என்றும் அமைச்சர் சிவக்குமார் தெரிவித்தார். 



Next Story

மேலும் செய்திகள்