பெண் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் : 5 பாதிரியார்களிடம் விசாரிக்க டி.ஜி.பி உத்தரவு
கோட்டயத்தில் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை
கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த மலங்கரா ஆர்தோடக்ஸ் சிரியன் சபை கட்டுப்பாட்டில் உள்ள மலப்பள்ளி தேவாலயத்துக்கு, சமீபத்தில் பாவமன்னிப்பு கேட்க வந்த இளம்பெண்ணை மிரட்டி, 5 பாதிரியார்கள் பலாத்காரம் செய்ததாகப் புகார் எழுந்தது.
இதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட 5 பாதிரியார்களை தேவாலய நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. இந்நிலையில், சர்ச் நிர்வாகமே அவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் என, அதன் செயலாளர் பிஜூ உம்மன் தெரிவித்தார்.
இதற்கு தேசிய பெண்கள் ஆணையம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்த, அம்மாநில டி.ஜி.பி. லோக்நாத் பெஹ்ரா உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, பாதிரியார்கள் 5 பேரிடம் கோட்டயத்தில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story

