அனைத்து மாநிலங்கள் பெயரையும் கூறி அசத்தும் இரண்டரை வயது அதிசய சிறுவன்

இரண்டரை வயது குழந்தை இத்தனை தகவல்களை தெரிந்து வைத்திருக்குமா? என ஆச்சரியப்பட வைக்கிறான் ஆம்பூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த சிறுவன்..
அனைத்து மாநிலங்கள் பெயரையும் கூறி அசத்தும் இரண்டரை வயது அதிசய சிறுவன்
x
அனைத்து மாநிலங்கள் பெயரையும் கூறி அசத்தும் இரண்டரை வயது அதிசய சிறுவன்வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த சான்றோர் குப்பம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் - ஸ்ரீதேவி தம்பதியரின் மகன் நந்தீஷ்வரன். இரண்டு வயது 5 மாதங்கள் ஆகும் இந்த சிறுவன் பொது அறிவு கேள்விகளுக்கு எல்லாம் சளைக்காமல் பதில் அளிக்கிறார். 

இந்தியாவில் உள்ள மாநிலங்களின் தலைநகரங்கள், தேசிய பறவை, தேசிய கீதம், தமிழ் இலக்கியத்தில் உள்ள முக்கியமான தகவல்கள் என எது கேட்டாலும் பளிச் என பதில் கூறுவது தான் சிறுவன் நந்தீஷ்வரனின் சிறப்பம்சம்.. 

குழந்தைகள் என்றால் விளையாட்டில் படுசுட்டி என சொல்லக் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் சிறுவன் நந்தீஷ்வரன் அதற்கு விதிவிலக்கு. மழலை மொழியில் அனைத்து தகவல்களையும் அவன் கூறுவதை கேட்பதே கொள்ளை இன்பம்... தன் மகனுக்கு ஒன்றரை வயது முதல் அனைத்து தகவல்களையும் கற்றுக் கொடுத்தாக கூறுகிறார் ஸ்ரீதேவி. இவர் கல்லூரியில் படித்த காலங்களில் பல மொழிகளில் வலது புறத்தில் இருந்து இடது புறம் நோக்கி எழுதி பலரின் பாராட்டுகளை பெற்றவர். இதுபோல் எழுதப்படும் எழுத்துகளை முகம் பார்க்கும் கண்ணாடி கொண்டு தான் படிக்க முடியும்...

"பொது அறிவு சார்ந்த விஷயங்களை மகனுக்கு கற்றுத்தந்தேன்"இரண்டரை வயதில் இத்தனை தகவல்களை துல்லியமாக தெரிந்து வைத்திருக்கும் சிறுவன் அந்த பகுதி மக்களின் செல்லப்பிள்ளையாகவே மாறி இருக்கிறான். சிறுவனுக்கு மேலும் பல அரிய தகவல்களை கற்றுத் தந்து அவனை பெரும் சாதனையாக மாற்ற வேண்டும் என்பதே பெற்றோரின் விருப்பமாக உள்ளது... 
Next Story

மேலும் செய்திகள்