காஷ்மீரில் பி.டி.பி கூட்டணியில் இருந்து விலகியது, பா.ஜ.க.

"பாஜகவுடனான கூட்டணி முறிவு அதிர்ச்சி அளிக்கவில்லை" "யாருடனும் கூட்டணி சேரும் எண்ணமில்லை" ராஜினாமாவிற்கு பின் மெகபூபா முஃப்தி தகவ​ல்
காஷ்மீரில் பி.டி.பி கூட்டணியில் இருந்து விலகியது, பா.ஜ.க.
x
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கூட்டணி கட்சியான பாஜக ஆதரவை விலக்கிக் கொண்டதை அடுத்து முதலமைச்சர் பதவியை மெகபூபா முஃப்தி ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து அங்கு ஆளுநர் ஆட்சிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 87 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், 
பிடிபி எனப்படும் மக்கள் ஜனநாயக கட்சியும் பாஜகவும் கூட்டணி அமைத்து ஆட்சி புரிந்து வந்தன.

பிடிபி-க்கு 28 எம்.எல்.ஏக்களும், பாஜகவிற்கு 25 எம்.எல்.ஏக்களும் உள்ள நிலையில், முதலமைச்சராக மெகபூபா முஃப்தி பதவி வகித்து வந்தார். இந்த நிலையில், அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெறுவதாக பாஜக அறிவித்துள்ளது. மாநிலத்தில் தீவிரவாதம் வளர்ந்து விட்டதாகவும், மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு அச்சுறுத்தல் நிலவுவதாகவும் குற்றம் சாட்டியுள்ள பாஜக மேலிட பொறுப்பாளர் ராம் மாதவ், இதனால் கூட்டணியை முறித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.​ இதனனைத்தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை ஆளுநர் வோராவுக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார். 

"பாஜகவுடனான கூட்டணி முறிவு அதிர்ச்சி அளிக்கவில்லை" "யாருடனும் கூட்டணி சேரும் எண்ணமில்லை" ராஜினாமாவிற்கு பின் மெகபூபா முஃப்தி தகவ​ல்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மெகபூபா முஃப்தி, பாஜகவின் முடிவு தமக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை என்றார். பாஜகவுடன் அதிகாரத்திற்காக கூட்டணி சேரவில்லை என்றும், ஆட்சியை தக்க வைக்க வேறு யாருடனும் கூட்டணி அமைக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் ஆளுநருடன் உமர் அப்துல்லா சந்திப்பு "ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை" - உமர் அப்துல்லா
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் வோராவை, அம்மாநில முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா, சந்தித்து பேசினார். ஜம்மு காஷ்மீரில் ஆட்சியைக் கைப்பற்ற தங்களது கட்சி முயலவில்லை என்று பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்தார். யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறு ஆளுநரிடம் வலியுறுத்தியதாகவும் உமர் அப்துல்லா குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்