பத்திரிகையாளர் சுஜாத் புகாரி கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு குழு அமைப்பு

பத்திரிகையாளர் சுஜாத் புகாரி கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை தலைவர் எஸ்.பி.பனி தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர் சுஜாத் புகாரி கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு குழு அமைப்பு
x
'ரைசிங் காஷ்மீர்' நாளிதழ் ஆசிரியர் சுஜாத் புகாரி, இப்தார் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க வியாழக்கிழமை காரில் சென்று கொ​ண்டிருந்த போது,  சிலர் துப்பாக்கியால் சுட்டதில் படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்த வழக்கு தொடர்பாக, காஷ்மீர் மாநில காவல்துறை தலைவர் எஸ்.பி.பனி,  தீவிரவாத சம்பவமாக கருதி விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார். 

பிரஸ் காலனி பகுதியில் இருசக்கர வாகனம் ஒன்றில் சென்ற மூன்று பேர் மீது சந்தேக எழுந்திருப்பதாகவும் ஆனால், அவர்கள் பற்றி தடயம் சுஜாத் புகாரி கொலை நடந்த இடத்தில் கிடைக்கவில்லை என்றும் எஸ்.பி.பனி தெரிவித்துள்ளார். 

கொலை சம்பவம் நடந்த இடத்தில் பதிவான காட்சிகளில் சந்தேகப்படும் வகையில் உள்ள 4வது நபரை கைது செய்திருப்பதாகவும், அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் காஷ்மீர் மாநில காவல்துறை தலைவர் எஸ்.பி.பனி தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட அந்த நபரிடம் கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் இந்த கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் எஸ்.பி.பனி தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்