மும்பை : நடிகை தீபிகா படுகோனே வசிக்கும் குடியிருப்பில் ​தீ
பதிவு: ஜூன் 13, 2018, 05:18 PM
மாற்றம்: ஜூன் 13, 2018, 05:18 PM
மும்பையின் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
மும்பையின் வொர்லி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 32 மற்றும் 33வது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீயானது அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவியது. இதையடுத்து தீயை அணைக்கும் பணியில் ஏராளமான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இருந்தபோதிலும் தீ வேகமாக பரவி வருவதால் முற்றிலுமாக அணைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் பத்திரமாக மீட்கப்பட்டனர். பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பு என்பதால் சேதம் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. பிரபல நடிகை தீபிகா படுகோனே வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு பகுதி இது என்பது குறிப்பிடத்தக்கது. 

பிற செய்திகள்

சமூக ஊடகங்களை கண்காணிக்க புதிய அமைப்பு - வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை

டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பரவும் கருத்துகளை கண்காணிக்க, மத்திய அரசு ஒரு புதிய கண்காணிப்பு மையத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

281 views

அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு - தமிழக அரசு விளக்கம்

அரசு பெண் ஊழியர்களுக்கு, முதல் பிரசவத்தில் இரு குழந்தைகள் பிறந்தாலும், இரண்டாவது பிரசவத்திற்கு அரசின் மகப்பேறு விடுமுறை உண்டு என, தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

596 views

சென்னை-சேலம் 8 வழிச்சாலை : எந்தெந்த பணிகளுக்கு எவ்வளவு தொகை செலவாகும்..?

சென்னை-சேலம் 8 வழிச்சாலை அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கியுள்ள நிலையில்,எந்தெந்த பணிகளுக்கு எவ்வளவு தொகை செலவாகும்..?

4 views

அடிப்படை பிரச்சனை தீர்க்கப்படாததற்கு எதிர்ப்பு - அல்வா தந்து நூதன போராட்டம்

கடலூரில் சாலை வசதி, ஆக்கிரமிப்பு அகற்றல் உள்ளிட்ட பிரச்னைகளை தீர்க்கப்படாததை கண்டித்து பொது நல இயக்கத்தினர் அல்வா கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்

59 views

பஸ் நிறுத்தத்தில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு

பஸ் நிறுத்தத்தில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு

396 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.