பிரணாப் முகர்ஜியை பிரதமராக்க ஆர்.எஸ்.எஸ் திட்டம் - சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் பேச்சால் சர்ச்சை

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் பிரணாப் முகர்ஜியை பிரதமராக்க ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டுள்ளதாக, சிவசேனா கட்சி தெரிவித்து உள்ளது.
பிரணாப் முகர்ஜியை பிரதமராக்க ஆர்.எஸ்.எஸ் திட்டம் - சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் பேச்சால் சர்ச்சை
x
கடந்த சில நாட்களுக்கு முன்பு, நாக்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பயிற்சி முகாம் நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் குடியரசுத் தலைவருமான பிரணாப் முகர்ஜி பங்கேற்றார். இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சை ஓய்வதற்குள், சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறிய கருத்து தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்றும், அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால், பிரணாப் முகர்ஜியை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டு உள்ளதாக கூறியுள்ளார்.  மேலும் நாக்பூர்  விழாவில் பிரணாப் முகர்ஜி, விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை, நீதித்துறை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஒரு வார்த்தையும் பேசவில்லை என்றும் சஞ்சய் ராவுத் கூறியுள்ளார். 

தந்தைக்கு தீவிர அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை - பிரணாப் முகர்ஜி மகள் காங். செய்தி தொடர்பாளர் சர்மிஷ்தா கருத்து

இதனிடையே, சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவுத்தின் கருத்துக்கு பிரணாப் முகர்ஜி மகளும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான சர்மிஸ்தா மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து,  சமூக வலைதளத்தில், கருத்து பதிவிட்டுள்ள சர்மிஸ்தா முகர்ஜி, தமது தந்தைக்கு மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடும் எண்ணம் நிச்சயம் இல்லை என தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்