கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதை அடுத்து, நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை  வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக  கோவை மாவட்டம் சின்ன கல்லார் ,  வால்பாறை   ஆகிய இடங்களில் 7 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சென்னை பொறுத்தவரை, வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகப்பட்ச வெப்பநிலை, 38 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசாகவும் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்