குறுவை தொகுப்பு திட்டத்தை உடனடியாக வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

டெல்டா விவசாயிகள் நலனுக்காக அரசு அறிவித்துள்ள 115 புள்ளி 67 கோடி மதிப்பிலான குறுவை தொகுப்பு திட்டத்தை உடனடியாக வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
குறுவை தொகுப்பு திட்டத்தை உடனடியாக வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
x
சட்டப்பேரவை விதி எண் 110ன்கீழ், குறுவை தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் வெளியிட்டார். 

அதன்படி, சூரிய சக்தி மோட்டார் பம்பு செட்களை ஊக்குவிக்கும் வகையில், மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பதிவு செய்த விவசாயிகள் தங்கள் விண்ணப்பத்தை திரும்பப் பெற முன் வந்தால் 90 சதவீதம் மானியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 

வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெற, அரசு அறிமுகப்படுத்தியுள்ள, உழவன் கைபேசி செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், 4 அங்குல விட்டம் 6 மீட்டர் நீளமுள்ள 30 பிவிசி குழாய்கள் கொண்ட அலகு ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய் வீதம் ஆயிரத்து 500 குழாய்களுக்கு மானியம் வழங்க 2 கோடி 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார் 

Next Story

மேலும் செய்திகள்