"பொறுப்பற்ற முறையில் பிளாஸ்டிக் பயன்படுத்துகிறோம்" - ஜக்கி வாசுதேவ்

பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க சட்டம் கொண்டு வருவது அவசியம் என ஜக்கி வாசுதேவ் வலியுறுத்தி உள்ளார்
பொறுப்பற்ற முறையில் பிளாஸ்டிக் பயன்படுத்துகிறோம் - ஜக்கி வாசுதேவ்
x
உலக சுற்றுச்சூழல் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் மற்றும் ஐ.நா. சுற்றுச்சூழல் நிர்வாக இயங்குநர்  எரிக் சோல்கம், நடிகை தியா மிர்சா பங்கேற்ற விவாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்த ஜக்கி வாசுதேவ், நீர், நிலம் மற்றும் காற்று பயன்பாடு தேவைக்கு குறைவாக்க குறைந்து வருவது மிகவும் ஆபத்தான நிலைக்கு நாம் செல்வதை சுட்டிக்காட்டுவதாக உள்ளதாக கூறினார். 130 கோடிக்கும் அதிகமான மக்கள் உள்ள நிலையில், இந்த நிலை தொடர்ந்தால் நாம் ஆண்டவனை நம்புவதை தவிர வேறு வழியில்லை என கூறினார். தற்போதைய சூழ்நிலைக்கு பிளாஸ்டிக்கை நாம் பொறுப்பற்ற வகையில் பயன்படுத்தி வருவதும் ஒரு காரணம். பிளாஸ்டிக் ஒரு அருமையான கண்டுபிடிப்பு. ஆனால் நாம் அதனை முறையாக பயன்படுத்தாதே, சுற்றுச்சூழலின் இன்றைய நிலைக்கு காரணம் என்றும் அவர் தெரிவித்தார். பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க கொள்கை வகுத்து, சட்டம் இயற்றி அரசு நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.  இந்த நிகழ்ச்சியில் ஐ.நா. சுற்றுச்சூழல் நிர்வாக இயக்குநர் எரிக் சோல்கமும் பங்கேற்று, பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது குறித்து பேசினார்.


Next Story

மேலும் செய்திகள்