கடைகளை குறிவைத்து இரவு நேர கொள்ளை

சென்னையில் 40 நாட்களில் 31 இடங்களில் நூதன முறையில் கொள்ளையடித்த பிரபல கொள்ளையனை காவல்துறையினர், கைது செய்தனர்
கடைகளை குறிவைத்து இரவு நேர கொள்ளை
x
சென்னையில் இரவு நேரங்களில் நூதன முறையில் கடைகளின் பூட்டை உடைத்து நடக்கும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வந்தன.கடந்த 40 நாட்களில் 31 இடங்களில் கொள்ளை நடந்தது .

சிசிடிவி பதிவுகளையும் கொள்ளையர்கள் எடுத்து சென்றுவிடுவதால், கொள்ளை கும்பலை கண்டுபிடிக்கமுடியாமல் போலீசார் திணறி வந்தனர்.

இந்த கொள்ளை சம்பவங்களுக்கு பெரும்பாலும், பெரிய ஷோரும்கள் தான் இலக்காக இருந்தன. இரவு நேரங்களில் சரக்குகளை இறக்குவது போன்று, கொள்ளையடிப்பது தான் இவர்களின் ஸ்டைல். இரவு 11 மணி அளவில் நோட்டமிட தொடங்கி அதிகாலை 3 மணிக்குள் தனது கொள்ளையை கச்சிதமாக முடித்துவிடுவான் கொள்ளையன் நவாஸ்.

இரவு நேரத்தில் ஷட்டர்களின் பூட்டை உடைத்து ஷோரும்களில் உள்ள பொருட்களை டெம்போ வேனில் ஏற்றி கொள்ளையடிப்பது இவரது யுத்தி.

ஷட்டர் 2 அடி அளவிற்கே திறந்து இருக்கும் படி பார்த்து கொள்வான். இதனால் பார்பவர்களுக்கு கடைக்கு தேவையான பொருட்களை இறக்குவது போன்றே தெரியும். அதே போல் ஒவ்வொரு கொள்ளை முடிந்ததும் கார் மற்றும் டெம்போ வேனின் பதிவு எண்களையும் மாற்றிவிடுவார்கள்.

அடுத்த கொள்ளை திட்டத்துடன் கிளம்பிய கொள்ளையர்களை பின்தொடர்ந்த போலீஸ் , கடை முன்பு சுற்றி வளைத்து, கார் கண்ணாடியை உடைத்து கொள்ளையர்களான சையத் நவாஸ், முகம்மது செரின், ராஜா ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 820 டைட்டன் வாட்ச்கள்,11 கிலோ வெள்ளி, 2 கார்கள், டெம்போ வேன் உட்பட 50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவர்களின் கைதுக்கு பிறகு இரவு நேர கொள்ளைகள் குறையும் என காவல்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்