"பஞ்சரான இந்திய பொருளாதாரம்" - ப.சிதம்பரம் விமர்சனம்

மூன்று சக்கரங்கள் பஞ்சரான காரைப்போல இந்திய பொருளாதாரம் பரிதாபமாக காட்சி அளிக்கிறது என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வேதனை தெரிவித்துள்ளார்.
பஞ்சரான இந்திய பொருளாதாரம் - ப.சிதம்பரம் விமர்சனம்
x
மும்பையில் நடைபெற்ற பொருளாதார கருத்தரங்கம் ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், தனியார் முதலீடு, தனியார் நுகர்வு, ஏற்றுமதி மற்றும் அரசு செலவுகள் பொருளாதாரத்தின் நான்கு முக்கிய அம்சங்கள் என்றார். இதில் ஏதேனும் ஒன்று இரண்டு பஞ்சரானாலும் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று அவர் கூறினார். ஆனால், மோடி தலைமையிலான மத்திய ஆட்சியில் மூன்றும் பஞ்சராகி உள்ளதாக ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார். 
சுகாதாரத்துறை உள்ளிட்ட சில துறைகளில் மட்டும் மத்திய அரசு செலவழித்து வருவதாக சிதம்பரம் குறிப்பிட்டார்.

எரிசக்தி துறையில் அண்மை காலத்தில் எந்த முதலீடும் இல்லை என்று சுட்டிக்காட்டிய அவர், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகளை உயர்த்தி மக்களை பாதிப்புகுள்ளாகி இருப்பதாக மத்திய அரசு மீது குற்றம்சாட்டி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்