ஜூன் 3 'உலக சைக்கிள் தினம்'

ஆண்டுதோறும் ஜூன் 3ம் தேதியை உலக சைக்கிள் தினமாக கொண்டாட, இன்று முதல் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜூன் 3 உலக சைக்கிள் தினம்
x
ஒரு காலத்தில் தவிர்க்க முடியாத வாகனமாக இருந்து வந்த சைக்கிள், அதிகரித்து வரும் மோட்டார் வாகனங்களின் ஓட்டத்தில் மிகவும் பின்தங்கி கிடக்கிறது.  கவுரவம் கருதி பலரும் சைக்கிளை ஒரு பொருட்டாக கருதுவதில்லை. அதே நேரத்தில், உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டுள்ள சிலர், வீட்டினுள்ளேயே சைக்கிளிங் பயிற்சி செய்து வருகின்றனர்..

உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல... காற்று மாசை குறைக்கவும் புற்று நோய் மற்றும் நீரிழிவு நோயை துரத்தவும் சைக்கிள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் தான், ஆண்டுதோறும் உலக சைக்கிள் தினத்தை கடைப்பிடிக்க ஐ.நா. சபை முடிவு செய்து,   கடந்த ஏப்ரல் 12ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.  

அதன்படி, இன்று முதல் ஜூன் 3ம் தேதியை சைக்கிள் தினமாக கொண்டாட உள்ளனர். டெல்லியில் இன்று காலை நடந்த உலக சைக்கிள் தின விழாவில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்றார். 

உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட, உலகின் 20 காற்று மாசு நகரங்களில் 14 நகரங்கள், இந்தியாவை சேர்ந்தவை. உலகின் சைக்கிள் தலைநகரான டென்மார்க்கில் 50 சதவீத மக்கள் சைக்கிளைத்தான் தங்கள் வாகனமாக பயன்படுத்துகிறார்கள். 

நம்முடைய உடல்நலனுக்காக மட்டுமல்லாமல், எதிர்கால சந்தததியினருக்கு சுத்தமான சுற்றுச் சூழலை உருவாக்கி தருவதற்காகவாவது,  சைக்கிளை பயன்படுத்த முயற்சிப்போம்.


Next Story

மேலும் செய்திகள்