நாட்டில் உள்ள 5,97,464 கிராமங்களுக்கும் மின் இணைப்பு

நாட்டில் உள்ள 5 லட்சத்து 97 ஆயிரத்து 464 கிராமங்களுக்கும் மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள 5,97,464 கிராமங்களுக்கும் மின் இணைப்பு
x

மணிப்பூர் மாநிலம் சேனாபடி மாவட்டத்தில் உள்ள லீசாங் கிராமம் கடைசியாக மின்சார இணைப்பு பெற்றுள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்சார இணைப்பு வழங்குவதற்காக, தீன்தயாள் உபாத்யாய் கிராம் ஜோதி யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. 2015ஆம் ஆண்டு சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் மோடி, 1000 நாட்களுக்குள் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார இணைப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அப்போது, 18,452 கிராமங்களுக்கு மின்சார இணைப்பு இல்லை என்பது தெரியவந்தது. அதையடுத்து இந்த கிராமங்களுக்கு மின்சார இணைப்பு வழங்கும் பணிகள் தொடங்கியது. அதன்படி, 987 நாட்களில் அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு கிடைத்துள்ளது. கடைசியாக மணிப்பூர் மாநிலத்தில் உள்ள லீசாங் கிராமத்துக்கு நேற்று மின்சார இணைப்பு வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்