ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டூடியோவுக்கு திடீரென சென்ற இளையராஜா

ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டூடியோவுக்கு திடீரென சென்ற இளையராஜா
x
துபாயில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் ஃபிர்தோஸ்(Firdaus) ஸ்டூடியோவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா சென்றுள்ளார். துபாய் எக்ஸ்போ இசைக் கச்சேரிக்காக துபாய் சென்றுள்ள இளையராஜா அங்குள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் ஃபிர்தோஸ் ஸ்டூடியோவுக்கும் சென்று பார்வையிட்டுள்ளார். அப்போது, இளையராஜாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை மகிழ்ச்சியுடன் டுவிட்டரில் பகிர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான், வரும் நாட்களில் இளையராஜா தங்களது ஃபிர்தோஸ் இசைக்குழுவுக்கு இசையமைப்பார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்