காகத்தை அழைத்த நடிகர்.. 'வருகிறதா' என ஆவலுடன் பார்த்த திருமாவளவன். 'ஆறு அறிவு' - படவிழாவில் ருசிகரம்

ஆறு அறிவு திரைபடத்தின் தொடக்க விழா விசிக தலைவர் திருமாவளவன் தொடங்கி வைத்தார்
x
சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேப்பில் ஆறு அறிவு திரைப்படத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குத்துவிளக்கேற்றி படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். இதனையடுத்து, வெளியே வந்த திருமாவளவன் முன்பு நடிகர் காக்கா கோபால் வானத்தை நோக்கி காகம் கரைவது போல் கரைந்து காட்டினார். அப்போது, காகம் வருகிறதா என வானத்தை நோக்கி திருமாவளவன் மகிழ்ச்சியுடன் பார்த்து கொண்டிருந்தார். 


Next Story

மேலும் செய்திகள்