சசிகுமார் பட டைட்டிலுக்கு சிக்கல்..!

காமன்மேன் என்கிற தலைப்பில் Chendur Films International தயாரிக்க நடிகர் சசிகுமார் நடிக்கவிருக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு சமீபத்தில் இணையதளத்தில் வெளியானது.
x
காமன்மேன் என்கிற தலைப்பில் Chendur Films International தயாரிக்க நடிகர் சசிகுமார் நடிக்கவிருக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு சமீபத்தில் இணையதளத்தில் வெளியானது.  ஆனால் இந்த தலைப்பின் உரிமை எங்களிடம் தான் உள்ளது என்று AGR RIGHT FILMS என்கிற தயாரிப்பு நிறுவனம் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிடம் மேல்முறையீடு செய்தது. சுசீந்திரனுக்கு இணை இயக்குனரான அறிமுக இயக்குநர் விஜய் ஆனந்த் சார்பில் 2018 ஆண்டே "COMMON MAN" என்கிற தலைப்பு தென்னிந்திய திரைப்பட சாம்பரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்சார் போர்ட்  தற்போது, 'காமன்மேன்' டைட்டிலை  AGR RIGHT FILMS நிறுவனத்திற்கு முறையாக சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால், அறிவிப்பு வெளியான சசிகுமார் பட டைட்டிலுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்