பட்டையை கிளப்பும் "ஜலபுலஜங்" பாடல் - 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை

"டான்" திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "ஜலபுலஜங்" பாடல் புதிய சாதனை படைத்துள்ளது.
x
"டான்" திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "ஜலபுலஜங்" பாடல் புதிய சாதனை படைத்துள்ளது. அறிமுக இயக்குனர் சி.பி. சக்ரவர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டான். இப்படத்தில், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில், இசையமைப்பாளர் அனிருத் இசையிலான இப்படத்தின் 'ஜலபுலஜங்' பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது, இந்த பாடல் யூடியூப் தளத்தில் 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்