உச்ச நட்சத்திரங்களின் படமில்லா பொங்கல் - விசில், ஆரவாரத்தை இழந்த திரையரங்குகள்

பொங்கல் பண்டிகை தினத்திலும் பல்வேறு தியேட்டர்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
உச்ச நட்சத்திரங்களின் படமில்லா பொங்கல் - விசில், ஆரவாரத்தை இழந்த திரையரங்குகள்
x
பொங்கல் பண்டிகை தினத்திலும் பல்வேறு தியேட்டர்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. 

2021ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை இப்படிதான் வரவேற்றது தமிழ்நாடு.. விஜயின் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களை மட்டுமல்லாது, திரையரங்கு ஓனர்களையும் மகிழ்ச்சி அடைய வைத்தது...

ஆனால் இந்த ஆண்டு அப்படி அமையவில்லை... 2021 பொங்கல் சமயத்தில் குறைந்து வந்த கொரோனா தொற்று, தற்போது அதிகரிக்க தொடங்கியதால், பொங்கல் ரிலீசுக்கு தயாராக இருந்த வலிமை, ஆர்.ஆர்.ஆர். படங்களின் ரீலீஸ் தள்ளிவைக்கப்பட்டன. தியேட்டர்கள் ரசிகர்களின் பெருங்கூட்டத்தை இழந்தன.

இதனால் சென்னை மட்டுமல்ல.... கோவை, திருச்சி என தமிழகம் முழுவதும் தியேட்டர்கள் வெறிச்சோடியே காணப்பட்டன.

எப்போதுமே உச்ச நட்சத்திரங்களின் படங்கள்தான் பொங்கல் பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்கும்.. ஆனால் இந்த முறை அது நடக்கவில்லை...

சசிகுமாரின் கொம்பு வச்ச சிங்கம்டா, பிரபுதேவாவின் தேள், நாய் சேகர், என்ன சொல்ல போகிறாய், கார்பன் போன்ற சிறிய பட்ஜெட் படங்கள் பொங்கல் ரிலீசாக தியேட்டருக்கு வந்துள்ளன.

எனினும் கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்கள் ரசிகர்கள் எண்ணிக்கை குறைய, இந்த படங்களுக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

இப்படி அமைதியாக இயங்கிய திரையரங்குகளில், பொழுதுபோக்குக்காக சிலர் குடும்பத்துடன் புதுப்படங்களை கண்டு ரசித்தனர்

மறுபக்கம் வலிமை படத்தை பெருமளவு நம்பியிருந்த திரையரங்கு உரிமையாளர்களுக்கு, ஒமிக்ரான் பரவலும், 50 சதவீத இருக்கை கட்டுப்பாடுகளும் பொங்கல் வசூலை முடக்கி, கவலையை தந்துள்ளது.

இந்த பொங்கல், திரையரங்கு உரிமையாளர்களுக்கு கொஞ்சம் கசப்புதான்...

Next Story

மேலும் செய்திகள்