பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் மறைவு - வெற்றிப் படங்களின் நடன இயக்குநர் சிவசங்கர்
பதிவு : நவம்பர் 29, 2021, 05:20 PM
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடன இயக்குநர் சிவசங்கர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். திரையுலகில் அவர் ஜொலித்த தருணங்களை நினைவுகூரும் ஒரு தொகுப்பை பார்க்கலாம்...
800-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள்...

நான்கு முறை தமிழக அரசின் விருது...

ஒரு முறை தேசிய விருது...

நடனத்துறையில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் மாஸ்டர் சிவசங்கர்...

1948ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த சிவசங்கர், நடநத்தின் மீதான ஆர்வத்தால் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தலைதிறந்த நடன இயக்குநராக வலம் வந்தவர்...பூவே உனக்காக, சூர்யவம்சம், சுயம்வரம், வெற்றிக் கொடி கட்டு, திருடா திருடி என பல வெற்றிப் படங்களில் நடன இயக்குநராக பணியாற்றி உள்ளார், சிவசங்கர்.திருடா திருடி படத்தில் வெளியாகி, பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்த மன்மத ராசா பாடலின் நடன இயக்குநர் இவர்தான்...வரலாறு படத்தில் நடிகர் அஜித்தை, நளினம் ததும்பும் பரதநாட்டியக் கலைஞராக காட்டிய பெருமை மாஸ்டர் சிவசங்கரையே சேரும்...பூவே உனக்காக, விஷ்வ துளசி, வரலாறு, உளியின் ஓசை உள்ளிட்ட படங்களுக்காக தமிழக அரசின் சிறந்த நடன இயக்குநர் விருதை வென்று இருக்கிறார், சிவசங்கர்.தெலுங்கு திரைத்துறையிலும் தன்னிகரற்ற நடன இயக்குநராக தடம் பதித்த இவர், இயக்குநர் ராஜ மவுலியின் பிரமாண்ட படைப்புகளான மகதீரா மற்றும் பாகுபலியில் சிலிர்க்க வைக்கும் நடனங்களை இயக்கியவர்...மகதீரா படத்தின் தீரா தீரா நடனத்தின் மூலம் பலரையும் சிலாகிக்க வைத்த சிவசங்கர், இதற்காக சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருதையும் பெற்றார். நடன இயக்குநராக மட்டுமின்றி பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் சிவசங்கர் நடித்து உள்ளார்.வரலாறு, பரதேசி, தானா சேர்ந்த கூட்டம், சர்க்கார், கண்ணா லட்டு தின்ன ஆசையா, தில்லுக்கு துட்டு என இவர் நடித்த படங்களில் பட்டியல் நீள்கிறது..மனைவி மற்றும் 2 மகனுடன் வசித்து வந்த சிவசங்கர், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், ஹைதராபாத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவரின் மறைவுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


பிற செய்திகள்

SK 21 ஹீரோயின் சாய் பல்லவி?

SK 21 அப்டேட் - சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்க உள்ளார்.

5 views

சூர்யாவின் அடுத்த 5 படங்கள்

சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் சூர்யாவின் அன்பான ஃபேன்ஸ்

9 views

நகராட்சி தேர்தலில் போட்டியிட ரசிகர்களுக்கு விஜய் அனுமதி

நகராட்சி தேர்தலில் போட்டியிட ரசிகர்களுக்கு விஜய் அனுமதி அளித்துள்ளதாக விஜய் மக்கள் இயக்க மாநில தலைவர் தகவல்.

14 views

அஜித் - சூர்யா... ரிலீஸ் ரேஸில் முந்துவது யார்?

அஜீத்குமாரின் "வலிமை" மற்றும் சூர்யாவின் "எதற்கும் துணிந்தவன்" ரிலீஸ் ரேஸில் முந்துவது யார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

14 views

நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு - நடிகர் திலீப் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு

நடிகையை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் விசாரணை அதிகாரிகளை கொல்ல சதித் திட்டம் தீட்டிய வழக்கில் நடிகர் திலீப்பை கைது செய்ய கேரளா உயர்நீதிமன்றம் வரும் புதன்கிழமை வரை தடை விதித்துள்ளது.

12 views

லிங்குசாமி இயக்கியுள்ள "தி வாரியர்" - டப்பிங் உரிமை விற்பனையில் சாதனை

இயக்குநர் லிங்குசாமி இயக்கியுள்ள "தி வாரியர்" திரைப்படத்தின், இந்தி டப்பிங் உரிமை பெரும் விலைக்கு விற்பனையாகி பாலிவுட்டில் சாதனை படைத்துள்ளது.

113 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.