பிரிக்ஸ் அமைப்பின் சிறந்த நடிகருக்கான விருது - அசுரன் படத்திற்காக நடிகர் தனுஷ் வென்றார்

பிரிக்ஸ் அமைப்பின் சிறந்த நடிகருக்கான விருது, அசுரன் படத்தில் நடித்ததற்காக நடிகர் தனுஷுக்கு வழங்கப்பட்டது.
x
பிரிக்ஸ் அமைப்பின் சிறந்த நடிகருக்கான விருது, அசுரன் படத்தில் நடித்ததற்காக நடிகர் தனுஷுக்கு வழங்கப்பட்டது. 

கோவாவில் 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கடந்த 20ஆம் தேதி தொடங்கி, நேற்று நிறைவடைந்தது. இதில் இந்தியா மற்றும் உலகெங்கிலும் இருந்து சிறந்த திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இதில் தங்க மயில் விருதை ஜப்பானிய திரைப்படம் 'ரிங் வாண்டரிங்' பெற்ற நிலையில், சிறந்த இயக்குனருக்கான வெள்ளி மயில் விருதை, 'சேவிங் ஒன் ஹூ இஸ் டெட்' படத்தின் இயக்குனர் வேக்லவ் கதர்ன்கா வென்றார். இதேபோல், நடிகர்கள் ஜிதேந்திர பிகுலால் ஜோஷி, நிஷிகாந்த் காமத் ஆகியோர் சிறந்த நடிகருக்கான வெள்ளி மயில் விருதையும், 
ஸ்பெயின் நடிகை ஏஞ்சலா மோலினா சிறந்த நடிகைக்கான வெள்ளி மயில் விருதையும் வென்றனர். இந்நிலையில், பிரிக்ஸ் அமைப்பின் சிறந்த நடிகருக்கான விருது, அசுரன் படத்திற்காக நடிகர் தனுஷுக்கு வழங்கப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்