2021 ஆம் ஆண்டு திரைப்படங்களின் வசூல் சாதனை - மாஸ்டர், அண்ணாத்த ரூ. 200கோடிக்கும் மேல் வசூல்

2021 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படங்களின் பட்டியலில் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படமும், ரஜினி காந்த் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படமும் 200கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
2021 ஆம் ஆண்டு திரைப்படங்களின் வசூல் சாதனை - மாஸ்டர், அண்ணாத்த ரூ. 200கோடிக்கும் மேல் வசூல்
x
2021 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படங்களின் பட்டியலில் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படமும், ரஜினி காந்த் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படமும் 200கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படம் மூன்றே வாரங்களில் 239 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை குவித்துள்ளது. தனுஷ் நடிப்பில் உருவான கர்ணன் படத்தின் பட்ஜெட் 37 கோடி ரூபாய் என்றாலும், மொத்தம் 60 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது. சிவகார்த்திகேயன் - நெல்சன் கூட்டணியில் உருவான டாக்டர் திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. வெங்கட்பிரபு - சிலம்பரசன் கூட்டணியில் உருவாகிய மாநாடு திரைப்படம் முதல் இரண்டு நாளில் மட்டும் 7 கோடியே 35 லட்ச ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 




Next Story

மேலும் செய்திகள்