"திரைத்துறையில் எம்.ஜி.ஆர், சிவாஜியின் பங்களிப்பு அளப்பரியது" - மத்திய அமைச்சர் எல்.முருகன் பேச்சு

திரைத்துறையில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் போன்றோர் பங்களிப்பு அளப்பரியது என சர்வதேச திரைப்பட விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
திரைத்துறையில் எம்.ஜி.ஆர், சிவாஜியின் பங்களிப்பு அளப்பரியது - மத்திய அமைச்சர் எல்.முருகன் பேச்சு
x
திரைத்துறையில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் போன்றோர் பங்களிப்பு அளப்பரியது என சர்வதேச திரைப்பட விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

52-ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் தொடங்கியது. இந்த விழாவின் தொடக்க நிகழ்ச்சியில், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் உரையாற்றினார். திரைப்பட தயாரிப்பு தொழிலுக்கு உகந்த இடமாக இந்தியா மாற, மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த எல்.முருகன், இதற்காக திரைப்பட தயாரிப்பாளர்கள், படப்பிடிப்புக்குத் தேவையான அனைத்து அனுமதிகளையும் ஒரே இடத்தில் பெறுவதற்கான அலுவலகம் தொடங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். மேலும், திரைத்துறைக்கு எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், என்.டி.ராமாராவ் போன்றோரின் பங்களிப்பு அளப்பரியது எனவும் எல்.முருகன் தனது உரையில் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்