நடிகர் பாரதி மணி உடல் நலக்குறைவால் மறைவு - திரையுலகினர் இரங்கல்

எழுத்தாளரும் நடிகருமான பாரதி மணி உடல் நலக்குறைவால் காலமானார் .
நடிகர் பாரதி மணி உடல் நலக்குறைவால் மறைவு - திரையுலகினர் இரங்கல்
x
எழுத்தாளரும் நடிகருமான பாரதி மணி உடல் நலக்குறைவால் காலமானார் . எழுத்தாளராகவும், நாடகக் கலைஞராகவும், திரைப்பட நடிகராகவும் மக்களிடம் அறிமுகமானவர் பாரதி மணி. இவர் உடல்நலக் குறைவால் டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 84.
நாகர்கோவில் அருகே உள்ள பார்வதிபுரத்தைச் சேர்ந்த பாரதி மணி நாடகங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். பாரதி  திரைப்படத்தில் பாரதிக்கு தந்தையாக நடித்த பின் "பாரதி" மணி என அனைவராலும் அழைக்கப்பட்டார். முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நாயகன்,நாயகிக்கு தாத்தா மற்றும் அப்பா வேடங்களிலும் பாரதி மணி நடித்துள்ளார். மேலும் பல்வேறு புத்தகங்களையும் பாரதி மணி எழுதியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்