நடிகர் சூர்யாவிற்கு திருமாவளவன் பாராட்டு

ஜெய்பீம் திரைப்படத்தின் மூலம் விளிம்பு நிலை மக்களின் இன்னல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளதாக நடிகர் சூர்யாவை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பாராட்டி உள்ளார்.
நடிகர் சூர்யாவிற்கு திருமாவளவன் பாராட்டு
x
ஜெய்பீம் திரைப்படத்தின் மூலம் விளிம்பு நிலை மக்களின் இன்னல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளதாக நடிகர் சூர்யாவை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர்,..ஜெய்பீம் திரைப்படத்தைத் தயாரிக்கவும் நடிக்கவும் முன்வந்து, தனது சமூகப் பொறுப்புணர்வை நடிகர் சூர்யா வெளிப்படுத்தி உள்ளதாக கூறி உள்ளார். எளியோருக்கு எதிராக நடக்கும் அட்டூழியங்களை மிகத் துல்லியமாக ஜெய்பீம் திரைப்படம் அம்பலப்படுத்தியுள்ளது என்றும், தலித் மற்றும் பழங்குடியினர்களுக்கு எதிராக ஆட்சி நிர்வாக அமைப்புகள் எவ்வாறு இயங்குகின்றன என்பதை இத்திரைப்படம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது என்றும், சட்டம், அதிகாரம் போன்றவற்றின் பயன்பாடு குறித்து பெரும் விவாதத்தை பொதுவெளியில் உருவாக்கியிருக்கிறது என்றும் திருமாவளவன் கூறி உள்ளார்.
சந்துரு போன்ற துணிச்சல்மிக்க வழக்கறிஞர்கள் மீது இன்று ஊபா சட்டம் பாய்வதாகவும், இத்தகைய சூழலில், இத்திரைப்படம் வெளிவந்து சமூகத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் திருமாவளவன் கூறி உள்ளார்.








Next Story

மேலும் செய்திகள்