சர்வதேச அளவில் சிறந்த படம் ஜெய் பீம் - IMDB வழங்கியுள்ள உச்சபட்ச அங்கீகாரம்
பதிவு : நவம்பர் 14, 2021, 03:42 PM
சர்வதேச அளவில் சிறந்த 250 படங்களில், ஜெய் பீம் திரைப்படத்தை IMDB தளம் முதலிடத்தில் தேர்வு செய்துள்ளது. இதுகுறித்து ஒரு செய்தி தொகுப்பு
ஜெய் பீம். படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகப்போகிறது... ஆனால் இந்த படம் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம், தேசிய அளவில் மட்டுமல்லாது உலக அரங்கின் கவனத்தை ஈர்த்துள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி, கேரள முன்னாள் அமைச்சர்கள் வரை அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள், ரசிகர்கள் ஜெய் பீம் படத்தை சிலாகித்து வருகின்றனர். பலதரப்பட்ட ரேட்டிங்கிலும் படத்திற்கு பாராட்டு தான்...

இப்படி இருக்க, சர்வதேச அளவில் சினிமா தகவல் சேகரிப்பு தளமான IMDB, ஜெய் பீம் படத்திற்கு அதிகபட்ச ரேட்டிங்கை வழங்கி பாராட்டியுள்ளது. படத்திற்கு கொடுக்கப்பட்ட ரேட்டிங் பத்துக்கு 9 புள்ளி 6. தற்போது வரை IMDB வழங்கியுள்ள உச்சபட்ச ரேட்டிங் இதுதான். இதன்மூலம் உலக சினிமாவில் மிக அற்புத படைப்புகளை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தில் சிம்மாசனமிட்டுள்ளது ஜெய் பீம்..

இதற்கு முன்னர் வரை IMDB அதிகபட்ச ரேட்டிங் கொடுத்த படம் The Shawshank Redemption... சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்படும் நட்பையும், தண்டனைக்கு பிந்தைய வாழ்க்கை பற்றிய கதையையும் நேர்த்தியாக கூறிய இந்த படத்திற்கு IMDB 9.3 ரேட்டிங் வழங்கியிருந்தது.

இதை தவிர, The Godfather, The Dark Knight, The Godfather Part II, 12 Angry Men போன்ற படங்களுக்கு மட்டுமே ஒன்பது அதற்கு மேல் புள்ளிகளை வழங்கியிருந்தது IMDB தற்போது 6வது படமாகவும், அதிலும் சிறந்த படமாகவும் ஜெய் பீமை தேர்வு செய்துள்ளது.

90களில் நிகழ்ந்த உண்மை கதையும், அந்த கொடூரத்தையும் அச்சு அசலாக திரைமொழிக்கு கொண்டு வந்ததற்கான சர்வதேச அங்கீகாரம் இது என IMDB ரேட்டிங்கை சுட்டிக்காட்டி படக்குழுவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ஜெய் பீம் படத்திற்கு வழங்கப்பட்டுள்ள இந்த அங்கீகாரம், தமிழ் சினிமாவிற்கு சர்வதேச அளவில் கிடைத்த கூடுதல் பெருமை...

தொடர்புடைய செய்திகள்

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

602 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

130 views

பிற செய்திகள்

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (02/12/2021) | Headlines | Thanthi TV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (02/12/2021) | Headlines | Thanthi TV

14 views

"மக்கள் விரும்பினால் கிராமப்புற சாலைகள் விரிவு படுத்தப்படும்" - அமைச்சர் முத்துசாமி

கிராமப்புற பொதுமக்கள் தங்களது பட்டாவுடன் ஒருங்கிணைந்து வந்தால் மாடி வீடுகள் கட்டித் தரப்படும் என்று, தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

10 views

சட்டமன்ற குழு பணியை கண்காணிக்க சிறப்பு அதிகாரி நியமனம்

தமிழக சட்டமன்ற குழுக்களின் பணிகளை கண்காணிக்க டெல்லியில் இருந்து சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

8 views

இல்லம் தேடி கல்வி திட்டம் - தன்னார்வலர்களை கண்காணிக்க உத்தரவு

இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றும் தன்னார்வலர்கள் குழந்தைகளிடம் தவறான வழியில் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

8 views

"அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை" - நரிக்குறவர் இன மக்கள் வேதனை

கள்ளக்குறிச்சி அருகே, நீலமங்கலம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாக நரிக்குறவர் இன மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

11 views

விரைவில் "5 மாவட்டங்களில் நெல் அரைக்கும் குடோன்கள் - அமைச்சர் சக்கரபாணி உறுதி

பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப் என்ற முறையில் ஐந்து மாவட்டங்களில் தினமும் 500 மெட்ரிக் டன் நெல் அரைக்கும் குடோன்கள் அமைக்கப்படும் என, உணவு மற்றும் உணவு வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.