52வது சர்வதேச இந்திய திரைப்பட விழா - விழாவில் திரையிட "கூழாங்கல்" படம் தேர்வு

52வது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் திரையிட, கூழாங்கல் திரைப்படம் தேர்வாகி உள்ளது.
52வது சர்வதேச இந்திய திரைப்பட விழா - விழாவில் திரையிட கூழாங்கல் படம் தேர்வு
x
இந்த ஆண்டின் சர்வதேச இந்திய திரைப்பட விழா நவம்பர் 20 முதல் 28ஆம் தேதி வரை கோவாவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், விழாவில் திரையிட, 226 படங்களில் இருந்து 25 திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. நடிகர் ராஜேந்திர சிங் பாபு தலைமையில் உள்ள 12 பேர் குழு, இந்த திரைப்படங்களை தேர்வு செய்துள்ளனர். இதில், விக்னேஷ் சிவன், நயன்தாரா தயாரிப்பில், வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கூழாங்கல் படமும் தேர்வு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த திரைப்படம் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவில், ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவின் பரிந்துரையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தவிர, குறு மட்டும் ஆவணப்படங்கள் பட்டியலில், 20 படங்கள் தேர்வாகியுள்ளன. இதில் ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கத்தில் உருவாகியுள்ள "ஸ்வீட் பிரியாணி" என்ற தமிழ் குறும்படம் தேர்வாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்