"நடிக்க விருப்பமில்லாத ரஜினியை நான்தான் கட்டாயப்படுத்தினேன்" - நடிகர் ரஜினிகாந்தின் நண்பர் பிரத்யேக பேட்டி

நடிக்க விருப்பமில்லாத நடிகர் ரஜினியை நடிக்க கட்டாயப்படுத்தி நான் தான் ஊக்கப்படுத்தினேன் என நடிகர் ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர் தெரிவித்துள்ளார்.
நடிக்க விருப்பமில்லாத ரஜினியை நான்தான் கட்டாயப்படுத்தினேன் - நடிகர் ரஜினிகாந்தின் நண்பர் பிரத்யேக பேட்டி
x
நடிக்க விருப்பமில்லாத நடிகர் ரஜினியை நடிக்க கட்டாயப்படுத்தி நான் தான் ஊக்கப்படுத்தினேன் என நடிகர் ரஜினியின் நண்பர்  ராஜ்பகதூர் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் கலைசேவையை பாராட்டி அவருக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு அளித்துள்ளது. அந்த விழா மேடையில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் தனது குருநாதர் பாலசந்தர் பெயரோடு தனது நண்பரான ராஜ்பகதூர் பெயரையும் ஒருசேர உச்சரித்தார். இந்நிலையில் ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர் தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளர். அதில், நடிகர் ரஜினிக்கு தொடக்கத்தில் நடிக்க விருப்பமே இல்லையெனவும் தனது கட்டாயத்தின் பேரிலேயே அவர் சென்னை திரைப்படக்கல்லூரிக்கு சென்றதாகவும் அங்குதான் இயக்குநர் பாலச்சந்தர் அவருக்கு வாய்ப்பு அளித்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விருது அவருக்கு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி எனவும், விழா மேடையில் அவர் எனது பெயரை உச்சரித்தது அவரது நன்றியை காட்டுகிறது என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்