67வது தேசிய திரைப்பட விருது - ரஜினி, தனுஷ், விஜய் சேதுபதிக்கு விருது

டெல்லியில் 67 வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று நடைபெற உள்ளது...
67வது தேசிய திரைப்பட விருது - ரஜினி, தனுஷ், விஜய் சேதுபதிக்கு விருது
x
டெல்லியில்  67 வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று நடைபெற உள்ளது. தமிழக திரையுலகம் இம்முறை 7 விருதுகளை குவித்துள்ளது டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் வைத்து துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு விருதுகளை வழங்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் சிறந்த படத்துக்கான தேசிய விருதை தட்டி சென்றுள்ளது, 'மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிம்ஹம்' என்ற மலையாள படம். மோகன்லால், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்த படம் சிறந்த கிராஃபிக்ஸ், சிறந்த உடையலங்காரம் என 3 தேசிய விருதுகளை தட்டி சென்றுள்ளது. இந்திய திரைப்பட விருதுகளில் மிக உயரிய விருதான, 'தாதா சாகேப் பால்கே' விருதை நடிகர் ரஜினிகாந்த் பெறவுள்ளார். நடிகர் சிவாஜிகணேசன், அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் இந்த விருதை பெற்றிருக்கிறார்கள். சிவாஜிகணேசனுக்கு பிறகு தமிழ் திரைப்படத்துறையில் நடிகர் ரஜினிகாந்த் இந்த விருதை பெறவுள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்