கேரள திரைப்பட விருதுகள் அறிவிப்பு - 'கிரேட் இந்தியன் கிச்சன்' சிறந்த படமாக தேர்வு

கேரள அரசின் சிறந்த திரைப்படத்திற்கான விருது கிரேட் இந்தியன் கிச்சன் படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள திரைப்பட விருதுகள் அறிவிப்பு - கிரேட் இந்தியன் கிச்சன் சிறந்த படமாக தேர்வு
x
கேரள அரசின் சிறந்த திரைப்படத்திற்கான விருது கிரேட் இந்தியன் கிச்சன் படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் சிறந்த திரைப்படங்கள் மற்றும் நட்சத்திரங்களுக்கு ஆண்டுதோறும் கேரள அரசால் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 51-வது கேரள திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குடும்ப அமைப்பில், சமையல் அறையில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு குறித்து ஜியோ பேபி இயக்கிய 'கிரேட் இந்தியன் கிச்சன்' படத்திற்கு சிறந்த படத்திற்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதபோல் மலையாளத்தில் சச்சி இயக்கிய அய்யப்பனும் கோசியும் என்ற திரைப்படம் கலைநயமிக்க படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான 'வெள்ளம்' படத்தில் நடித்த ஜெயசூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், 'கப்பேலா' படத்தில் நடித்த அன்னா பென்னுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் கேரள அரசு அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்