மூத்த நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார் - வயது முதிர்வு காரணமாக உயிரிழப்பு

தங்கப்பதக்கம், பைரவி உள்ளிட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் வயது முதிர்வு காரணமாக காலமானார்.
மூத்த நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார் - வயது முதிர்வு காரணமாக உயிரிழப்பு
x
இயக்குநர் ஸ்ரீதரின், வெண்ணிற ஆடை திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். சென்னையில் அரசுப்பணியில் இருந்த ஸ்ரீகாந்த், நாடகங்களின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக திரையுலகில் கால்பதித்தார். மேஜர் சந்திரகாந்த், எதிர்நீச்சல், பாமா விஜயம், தங்கப்பதக்கம், பைரவி உள்ளிட்ட பல்வேறு படங்களிலும், ஸ்ரீகாந்த் தன் நடிப்பின் மூலம் முத்திரை பதித்தார். சிவாஜி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோருடன் ஏராளமான திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். வயது முதிர்வு காரணமாக ஸ்ரீகாந்த் காலமான நிலையில், அவரின் மறைவுக்கு ரசிகர்களும், திரையுலகினரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்