ரசிகர்களை மயக்கிய பிறைசூடன் பாடல்கள் = சோகத்தில் ஆழ்ந்த இசை ரசிகர்கள்
பதிவு : அக்டோபர் 09, 2021, 02:48 AM
சினிமா பாடல் ஆசிரியரும் கவிஞரும் ஆன பிறை சூடன் மாரடைப்பால் காலமானார். காதல், சோகம், என பல்வேறு உணர்வுகளை பாடல்களால் வடித்த கவிஞர் பிறைசூடன் குறித்த செய்தி தொகுப்பை பார்ப்போம்.....
சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பு காரணமாக, கவிஞர் பிறைசூடன் காலமானார். அவருக்கு வயது 65. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள  நல்லமாங்குடியில் பிறந்தவர் பிறைசூடன். இவரது இயற்பெயர் சந்திரசேகரன். காவல்துறை உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ராஜ் மற்றும் தனலட்சுமி  தம்பதியினருக்கு 1956 ஆம் ஆண்டு மூத்த மகனாகப் பிறந்தவர். பிறைசூடன்....தமிழ் மீது ஆர்வம் கொண்டதால் சந்திர சேகரன் என்ற பெயரை பிறைசூடன் என மாற்றி கொண்டுள்ளார். கடந்த 1985 ஆம் ஆண்டு, சிறை என்னும் படத்தில், ராசாத்தி ரோசாப்பூவே என்ற பாடல் மூலம் திரையுலகில் அறிமுகமானார் பிறைசூடன். இதனையடுத்து ராஜாதி ராஜா படத்தில் அவர் எழுதிய மீனம்மா மீனம்மா பாடல் பெரும் வரவேறப்பை பெற்றது.பிறகு, 'பணக்காரன்' படத்தில் 'நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்' என்னும் வாழ்த்துப்பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது. இயக்குநர் வசந்த் இயக்கிய 'கேளடி கண்மணி'யில் 'தென்றல் தான் திங்கள்தான்' என்னும் பாடல், ஈரமான ரோஜாவேயில் கலகலக்கும் மணி ஓசை. என காதல் பாடல்கள் இளைஞர்களை வசப்படுத்தியது. காதல் கவிதைகள் படித்திடும் நேரம், என்னை தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி ஆகிய பாடல்கள் காதல் மனங்களை சுண்டி இழுத்தன.இளையராஜாவின் இசையில் இவர் எழுதிய பல பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின.இது மட்டுமின்றி தத்துவம் சோகப்பாடல்களும் இவரது கற்பனை திறனுக்கு எடுத்துக்காட்டாகும். ராசாவின் மனசிலே படத்திற்காக சோலை பசுங்கிளியே என்ற பாடலுக்காக 1991ஆம் ஆண்டும், பிறகு 1996 ஆம் ஆண்டும் தமிழக அரசின் சிறந்த பாடல் ஆசிரியருக்கான விருதை பிறைசூடனுக்கு பெற்று தந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் விளம்பரங்களுக்கு இசையமைத்துக்கொண்டிருந்தபோது அவற்றுக்கு சிறு சிறு வரிகள் எழுதி கொடுத்த பிறைசூடன் பின்பு, ஸ்டார் படத்தில் 'ரசிகா ரசிகா என்ற பாடலை எழுதினார். இதுவும் இசை ரசிகர்களை கொள்ளை கொண்டது.காதலுக்கு மட்டுமல்ல காதல் தோல்விக்கு அவர் எழுதிய இதயமே இதயமே பாடல் கல்லையும் கரைய வைக்கும். திரைப்படங்களில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை எழுதிய பிறைசூடன், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தி பாடல்களையும் எழுதியுள்ளார். அவரது மறைவு திரையுலகினரையும், இசை ரசிகர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

601 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

130 views

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பேரணி - ஆயிரக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்பு

தென் அமெரிக்க நாடான சிலியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பால் புதுமையினர் பிரமாண்ட பேரணி நடத்தினர்.

60 views

“’ரவுடி பேபி’ சூர்யாவை ஏன் கைது செய்யல..?“ - சாலையில் கதறி அழுத பெண்கள்

டிக்டாக் பிரபலம் ரவுடிபேபி சூர்யா-வை கைது செய்யக்கோரி பெண்கள் சிலர் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

55 views

பிற செய்திகள்

'வலிமை' படத்தின் 2வது பாடலின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'வலிமை' படத்தின், 2வது பாடலின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

7 views

இனி "தல"ன்னு கூப்பிடாதீங்க.. - நடிகர் அஜித்குமார் வேண்டுகோள்

'தல' என்று தன்னை அழைக்க வேண்டாம் என நடிகர் அஜித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

13 views

இனி "தல"ன்னு கூப்பிடாதீங்க.. - நடிகர் அஜித்குமார் வேண்டுகோள்

தன்னை தல என அழைக்க வேண்டாம் என்று நடிகர் அஜித், ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

39 views

முடிகிறது 'மணி ஹெய்ஸ்ட்' - ஆரம்பமாகிறது பெர்லின் ஆட்டம்

முடிகிறது 'மணி ஹெய்ஸ்ட்' - ஆரம்பமாகிறது பெர்லின் ஆட்டம்

16 views

ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற 83 படத்தின் டிரெய்லர்

83 திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

396 views

'அய்யப்பனும் கோஷியும்' படத்திற்கு விருது - பினாராயி விஜயன் வழங்கினார்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், கேரள அரசின் 51வது மாநில திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.