தெலுங்கு நடிகர் சங்க தேர்தல்: வார்த்தைகளால் மல்லுக்கட்டும் நடிகர்கள்

தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் நீ லோக்கலா, நான் லோக்கலா என நடிகர்கள் வார்த்தை போரில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து விரிவாக பார்ப்போம்
தெலுங்கு நடிகர் சங்க தேர்தல்: வார்த்தைகளால் மல்லுக்கட்டும் நடிகர்கள்
x
912 பேர் உறுப்பினர்களை கொண்ட தெலுங்கு நடிகர் சங்கத்திற்கு வருகிற 10-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் தலைவர் பதவிக்கு மூத்த நடிகர் மோகன்பாபுவின் மகன் மஞ்சு விஷ்ணுவும், அவரை எதிர்த்து பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ்வும் போட்டியிடுகின்றனர்

ஒருபக்கம் நடிகர் சங்க உறுப்பினர்களிடம் ஆதரவு கோரி வர, மறுபக்கம் இருதரப்பும் பரஸ்பரம் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ஆந்திர மாநிலத்தில் உருவாக்கப்பட்ட நடிகர் சங்கத்திற்கு ஆந்திராவில் தலைவர்களே இல்லையா? என மஞ்சு விஷ்ணு தரப்பினர் கேள்வி எழுப்ப, 

பதிலுக்கு, அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் நடிகர்கள் தான், யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என பிரகாஷ் ராஜ் தரப்பினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்

இருதரப்பிலும் பல்வேறு பிரபல நடிகர்களின் ஆதரவு இருப்பதோடு, பிரகாஷ் ராஜ்க்கு எதிராக அரசியல் தலையீடு இருப்பதாகவும் பேசப்படுகிறது

இதனால் சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும், நீ லோக்கலா, நான் லோக்கலா என பரஸ்பரம் இருதரப்பும் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்த சூழலில், நடிகர் சங்க தேர்தலில் சர்ச்சை வேண்டாம், அரசியல் செய்ய வேண்டாம் என தேர்தலில் போட்டியிடுவோருக்கு மூத்த நடிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்