'பேர் வச்சாலும் வைக்காம போனாலும்' : பாடல் உருவான ரகசியம் - பகிர்ந்த இளையராஜா

31ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டிரெண்டிக்கில் உள்ள 'பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்' பாடல் உருவான கதை குறித்து சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார், இசைஞானி இளையராஜா....
பேர் வச்சாலும் வைக்காம போனாலும் : பாடல் உருவான ரகசியம் - பகிர்ந்த இளையராஜா
x
நடிகர் கமல் நடிப்பில் 1990ம் ஆண்டு வெளியான படம் 'மைக்கேல் மதன காமராஜன்'.... இளையராஜா இசையமைத்த இந்த படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட் வரிசையில் இடம்பிடித்தன... காமெடி கதை களம் கொண்ட இந்த படத்தில் கமல் நான்கு வேடத்தில் நடித்திருப்பார்...தற்போது மூன்று வேடத்தில் சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா படத்தில் இடம்பெற்றுள்ள 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தின் பாடலால்...  பலரும் மீண்டும் விரும்பி கேட்கும் பாடலாகிவிட்டது.. 90ஸில் வெளியான'பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்' பாடல்...தந்தை இளையராஜாவின் பாடலை தனது படத்தில் மீண்டும் யுவன் சங்கராஜா பயன்படுத்தவே.... 'ராஜா ராஜா தான்' என பாடலோடு சேர்ந்து பாடலின் நடனமும் தற்போது ட்ரெண்டிங் லிஸ்டில் இடம்பெற்றுள்ளது. வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் என பலரும் இந்த பாடலை ஸ்டேடஸாக வைத்து வருவது மட்டுமின்றி, இந்த பாடலுக்கு நடனமாடி ரீல்ஸூம் வெளியிட்டு வருகின்றனர்...இந்நிலையில், 'பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்' பாடல் உருவான கதை குறித்து இளையராஜா சுவாரஸ்யமான தகவலை வெளியிட்டுள்ளார்... இது தொடர்பான வீடியோவில் திருக்குறளில் இருந்தே பாடலுக்கான மெட்டை எடுத்ததாக கூறியுள்ளார், இளையராஜா... தற்போது ஒரு கோடி பார்வைகளை தாண்டி, தந்தை  ராஜாவின் ரசிகர்களும், மகன் யுவன் சங்கர் ராஜாவின் ரசிகர்களும் கொண்டாடும் பாடலாக மாறியுள்ளது. இந்த பாடல்.



Next Story

மேலும் செய்திகள்