தீபாவளிக்கு அண்ணாத்த vs மாநாடு -வலிமை ரிலீசாகுமா என எதிர்பார்ப்பு
பதிவு : செப்டம்பர் 11, 2021, 11:48 PM
தீபாவளிக்கு அண்ணாத்த படத்துடன் சிம்பு நடித்துள்ள மாநாடு படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி ரேஸில் உள்ள படங்களை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....
பொங்கல், தீபாவளி என்றாலே பெரிய நடிகர்களின் படம் ரிலீஸ் என்பது தமிழ் சினிமாவில் தொன்று தொட்டு வரும் வழக்கம்..ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற உச்ச நட்சத்திரங்களோ அல்லது முன்னணி இயக்குனர்களின் படைப்புகளோ வரிசைக்கட்டி போட்டிபோடும் கடந்த ஆண்டு தீபாவளி ரிலீஸுக்கு கொரோனா தடை போட்டாலும், பொங்கல் விருந்தாக ரசிகர்களை குஷிப்படுத்தின மாஸ்டர், ஈஸ்வரன் திரைப்படங்கள்..பொங்கல் பண்டிகையின் போது விஜயுடன் போட்டி போட்ட சிலம்பரசன், தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்துக்கு போட்டியாக மாநாடுடன் தயாராகிவிட்டார்..தீபாவளிக்கு நாங்கள் ரெடி என ஏற்கனவே அறிவித்த அண்ணாத்த படக்குழு, விநாயகர் சதுர்த்தி தினத்தில், ரஜினியின் மாஸை வெளிக்காட்டும் விதமாக மோசன் போஸ்டரை வெளியிட்டு இணையத்தை தெறிக்கவிட்டது.தற்போது மாநாடு படமும் தீபாவளிக்கு ரிலீசாகும் என அறிவிப்பை வெளியிட்டு தனது ரசிகர்களை மகிழ்வித்துள்ளார் சிலம்பரசன்..
பெரிய ஹிட்டிற்காக காத்திருக்கும் சிலம்பரசன்... வெங்கட்பிரபு இயக்கம். எஸ்.ஜே சூர்யா உட்பட பெரும் நட்சத்திர பட்டாளம்... யுவன்சங்கர் ராஜா மியூசிக்... இவை அனைத்துமே மாநாட்டை மிகவும் எதிர்பார்க்க வைக்கும் அம்சங்கள்..இவை எல்லாம் ஒருபுறம் என்றால் நீண்ட நாட்களாக ரசிகர்களை அப்டேட்க்காக காக்க வைத்த வலிமை படக்குழு, தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்வதில் முனைப்பு காட்டுவதாக பேசப்படுகிறது.ஒருவேளை அவர்களும் களத்தில் குதித்தால் ரஜினி, அஜித்துடன் மோத வேண்டிய நிலை சிம்புவிற்கு உருவாகலாம்..மூன்று தயாரிப்பாளர்களும் எதிர்பார்க்கும் அளவிற்கு திரையரங்குகள் கிடைக்குமா என்ற கேள்வியும் உள்ளது.எது எப்படி இருந்தாலும் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தால், திரையரங்கில் ரசிகர்களுக்கு விருந்து நிச்சயம் என்பதே அண்ணாத்த, மாநாடு படக்குழுவினரின் எதிர்பார்ப்பு...


தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

796 views

(01/08/2021) சார்பட்டா அரசியல்!

(01/08/2021) சார்பட்டா அரசியல்!

153 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

96 views

முன்விரோத தகராறில் ரவுடி கொலை - திருந்தி வாழ்ந்தவரை கொன்ற கும்பல்

சென்னையில் முன்விரோதம் காரணமாக திருந்தி வாழ்ந்த ரவுடியை கொலை செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

48 views

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

34 views

பிற செய்திகள்

கேரள திரைப்பட விருதுகள் அறிவிப்பு - 'கிரேட் இந்தியன் கிச்சன்' சிறந்த படமாக தேர்வு

கேரள அரசின் சிறந்த திரைப்படத்திற்கான விருது கிரேட் இந்தியன் கிச்சன் படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

31 views

31வது பிறந்தநாளை கொண்டாடும் இசையமைப்பாளர் அனிருத்

தமிழ் திரையுலகத்தை தன் இசையால் ஈர்த்து வரும் இசையமைப்பாளர் அனிருத், தனது 31வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.

9 views

'ஜெய்பீம்' திரைப்படத்தின் டீசர் வெளியீடு - வழக்கறிஞராக மிரட்டும் நடிகர் சூர்யா

சூர்யா நடிக்கும் ஜெய்பீம் திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

357 views

சூர்யா நடிக்கும் "ஜெய்பீம்" - கவனம் ஈர்த்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

சூர்யா நடிக்கும் ஜெய்பீம் திரைப்படத்தின் டீசர் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

1310 views

இணையத்தை கலக்கிய மணி ஹெய்ஸ்ட் தொடர் - இறுதி பாகத்தின் டீசர் வெளியீடு

இணையத்தை கலக்கிய மணி ஹெய்ஸ்ட்(Money Heist) தொடரின் 5 பாகத்தின் 2 ஆவது பகுதியின் டீசரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

22 views

ரஜினியின் "அண்ணாத்த" படத்தின் டீசர் வெளியீடு

ரஜினியின் "அண்ணாத்த" படத்தின் டீசர் வெளியீடு

2425 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.