தீபாவளிக்கு வெளியாகுமா வலிமை...? - #ValimaiDiwali டிரெண்டாகும் ஹேஷ்டேக்

ரஜினி மற்றும் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள இரு திரைப்படங்கள் தீபாவளி அன்று ஒரே நாளில் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீபாவளிக்கு வெளியாகுமா வலிமை...? - #ValimaiDiwali டிரெண்டாகும் ஹேஷ்டேக்
x
ரஜினி நடித்த பேட்ட திரைப்படமும், அஜித்தின் விஸ்வாசம் திரைப்படமும் கடந்த முறை ஒரே நாளில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. தற்பொழுது மீண்டும் இருவரது திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகி போட்டிப்போட உள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படம் தீபாவளி அன்று வெளியிடப்படும் என ஏற்கெனவே படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்ற வலிமை திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லையென்றாலும் #ValimaiDiwali என்ற ஹேஷ்டேகை அஜித் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்