சார்பட்டா பரம்பரை படம் பேசும் அரசியல்? "எம்.ஜி.ஆர். குறித்து தவறாக சித்தரிப்பு" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்
பதிவு : ஜூலை 25, 2021, 02:32 AM
சார்பட்டா திரைப்படத்தில் அதிமுக குறித்து தவறாக சித்தரித்திருப்பதாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடித்து ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது, சார்பட்டா பரம்பரை திரைப்படம். 70களில் வடசென்னை மக்களின் வாழ்வியலோடு ஒன்றி இருந்த குத்துச்சண்டை விளையாட்டை பற்றிப் பேசுகிறது, இந்தப் படம்.

இதில், பசுபதி போன்ற பிரதான கதாபாத்திரங்களை திமுகவைச் சேர்ந்தவர்களாக காட்சிப்படுத்தி இருக்கிறார், பா.ரஞ்சித். அதேசமயம், எம்.ஜி.ஆர். மற்றும் அதிமுக குறித்த கருத்துகளும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், சார்பட்டா பரம்பரை திரைப்படம் முழுக்க முழுக்க திமுகவின் பிரசாரப் படமாகவே எடுக்கப்பட்டுள்ளது என அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். குறிப்பாக, குத்துச்சண்டை விளையாட்டை மிகவும் நேசித்த தலைவர் எம்.ஜி.ஆர். என்றும், அவரது படங்களை முன்மாதிரியாக கொண்டு, ஆயிரக்கணக்கான வீரர்கள் களத்திற்கு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

1980ல் தமிழ்நாடு அமெச்சூர் பாக்சர் சங்கத்துக்கான நிதி திரட்டும் வேடிக்கை குத்துச்சண்டை போட்டியில், நாக்-அவுட் நாயகன் முகமது அலியை சென்னை அழைத்து வந்து பங்கேற்க வைத்தவர் என குறிப்பிட்டுள்ள ஜெயக்குமார், இப்படி, எத்தனையோ வீரர்களை ஊக்குவித்த எம்.ஜி.ஆரை சார்பட்டா படத்தில் தவறாக சித்தரித்து இருப்பது மிகுந்த வருத்தம் அளிப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.

சமரசம் செய்து கொள்வது கலைக்கு மட்டுமல்ல, கலைஞனுக்கும் அழகல்ல என்றும், பா.ரஞ்சித்தின் செயலை வன்மையாக கண்டிப்பதாகவும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

762 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

674 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

460 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

91 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

62 views

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

23 views

பிற செய்திகள்

"ஒலிபெருக்கிகளுக்கு அனுமதியில்லை என்றால் பறிமுதல் செய்யப்படும்" - மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

அனுமதியின்றி பயன்படுத்தப்படும் அனைத்து ஒலிபெருக்கிகளும் பறிமுதல் செய்யப்படும் என்று, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

13 views

புதுச்சேரி ராஜ்யசபா தேர்தல் - பாஜக வேட்பாளர் செல்வகணபதி தேர்வு

புதுச்சேரியின் மாநிலங்களவை உறுப்பினராக, செல்வகணபதி தேர்வு செய்யப்பட்டார். புதுச்சேரியில் உள்ள ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு, பாஜகவை சேர்ந்த செல்வகணபதி வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், அவரை எதிர்த்து வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், செல்வகணபதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

24 views

தமிழகத்தின் ராஜ்யசபா எம்.பி.க்கள் தேர்வு - சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு

தமிழகத்தின் மாநிலங்களவை உறுப்பினர்களாக கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டனர்.

17 views

ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வானார் எல்.முருகன் - மத்திய பிரதேசத்தில் இருந்து தேர்வு

மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக எல்.முருகன் தேர்வு செய்யப்பட்டார்.

17 views

"அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தோல்வி பயத்தால் நிராகரிப்பு" - எடப்பாடி பழனிசாமி

ஜனநாயக முறைப்படி உள்ளாட்சி தேர்தலை கடந்த அதிமுக அரசு நடத்தியதாகவும், தற்போது வேட்பாளர்களை நிராகரிக்கும் பணியை திமுக மேற்கொண்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

16 views

பாமகவுக்கு எதிரான நோட்டீஸ் - ரத்து செய்ய மறுப்பு

மரக்காணம் கலவரம் தொடர்பாக பாமகவுக்கு அனுப்பிய விசாரணை நோட்டீஸை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.