கிரிக்கெட் வீரருக்கு ஜோடியாகும் சன்னி லீயோன்

பாலிவுட் திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்க்கு ஜோடியாக நடிக்கிறார் சன்னி லியோன்.
கிரிக்கெட் வீரருக்கு ஜோடியாகும் சன்னி லீயோன்
x
பாலிவுட் திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்க்கு ஜோடியாக நடிக்கிறார் சன்னி லியோன். கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், சமீப காலமாக திரைப்படங்களில் நடிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார். ஏற்கனவே 2 இந்தி படங்களில் நடித்துள்ள அவர், தற்போது புதிதாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். ராதாகிருஷ்ணன் இயக்கும் இந்தப் படத்தில் அவர் சிபிஐ அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்துக்கு பட்டா என்று பெயர் வைத்துள்ளனர். இந்நிலையில், இந்தப் படத்தில் ஸ்ரீசாந்துக்கு ஜோடியாக, நடிகை சன்னி லியோன் ஒப்பந்தமாகி உள்ளார். இதற்கான படப்பிடிப்பும் விரைவில் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்