சொகுசு கார் விவகாரத்தில் விஜய்யின் மேல்முறையீட்டு வழக்கு - உயர்நீதிமன்றம் உத்தரவு

சொகுசு கார் நுழைவு வரி விவகாரத்தில் நடிகர் விஜய்யின் மேல் முறையீட்டு மனுவை, வரி தொடர்பான அமர்வுக்கு மாற்ற பதிவுத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
x
சொகுசு கார் நுழைவு வரி விவகாரத்தில் நடிகர் விஜய்யின் மேல் முறையீட்டு மனுவை, வரி தொடர்பான அமர்வுக்கு மாற்ற பதிவுத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. 

 
நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்த, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அறிவுறுத்தியது.
 
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் தொடர்ந்திருந்த வழக்கை, சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தள்ளுபடி செய்தார்.
 
மேலும், நடிகர்கள் உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டுமென்று கூறி, நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, கொரோனா நிவராண நிதிக்கு வழங்குமாறு அவர் உத்தரவிட்டு இருந்தார்.
 
இதனை எதிர்த்தும், அபராதத்தை ரத்து செய்யக் கோரியும் நடிகர் விஜய் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 
 
இதேபோல், மேல்முறையீட்டு மனுவை தீர்ப்பின் நகல் இல்லாமல் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள அனுமதி கேட்டு வழக்கு தொடரப்பட்டது.
 
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
 
அப்போது, இந்த வழக்கை வரி தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்ற நீதிபதிகள் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர்.
 
இதனால், நடிகர் விஜயின் மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்