பாலிவுட் சூப்பர் ஸ்டார் திலீப்குமார் மறைவு

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் திலீப்குமார் 98வது வயதில் காலமானார்... திரையுலகில் கொடிக்கட்டி பறந்த பாலிவுட் சூப்பர் ஸ்டாரின் அழகிய பயணத்தை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
பாலிவுட் சூப்பர் ஸ்டார் திலீப்குமார் மறைவு
x
பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் திலீப்குமார் 98வது வயதில் காலமானார்... திரையுலகில் கொடிக்கட்டி பறந்த பாலிவுட் சூப்பர் ஸ்டாரின் அழகிய பயணத்தை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

ஷாருக் கான்.. சல்மான் கான்... அமீர் கான்... இர்பான் கான்... இப்படி பாலிவுட்டில் பல கான்கள் கொடிக்கட்டி பறந்தாலும், இவர்களுக்கு எல்லாம் பிதாமகன் 

முகமது யூசப் கான் என்கிற திலீப் குமார் தான்... பாலிவுட்டின் முதல் கான் என்று அழைக்கப்படும் ஆதர்ச நாயகன்..

எந்த பாத்திரத்தில் நடித்தாலும், அந்த நடிப்பில் கச்சிதம்... ஏற்றுக்கொண்ட பாத்திரத்தை கடைக்கோடி ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் திறன் மிகுந்தவர் என திரை பிரபலங்களால் சிலாகிக்கப்படுபவர், திலீப் குமார்..

காய்கறிகளை விற்று வந்த இளைஞர் முகமது யூசப் கான், பாம்பே பிலிம் ஃபேக்டரியில் நடிப்பு பயின்று 1944ஆம் ஆண்டு JWAR BHATA படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கிறார். அதுவரை முகமது யூசப் கான் என்று அழைக்கப்பட்டவருக்கு திலீப் குமார் என திரைப்பெயரை வைத்தார் நடிகை தேவிகா ரானி.. 

அமிதாப் பச்சன் தொடங்கி ஷாருக் கான், இம்ரான் கான் என தலைமுறைகள் பல கடந்தாலும், அவரது நடிப்பு சாயல் இன்று வரை திரையில் வெளிப்படுவதுதான் அவரது கூடுதல் ஷ்பெஷல்..

பன்முக நடிப்பால் பங்காளி நாடான பாகிஸ்தானிலும் கொண்டாடப்பட்டார்.. ஏன் இருநாட்டு மக்களின் உறவுப்பாலமாக இருந்தவர் என்றெல்லாம் சிலாகிக்கப்படுகிறார்..

திலீப்குமார் என்றாலே பாலிவுட் ரசிகர்களுக்கு நினைவுக்கு வருவது 3 படங்கள்... Jugnu, Deedar, Devdas... காதல் தோல்வியால் அனைத்தையும் இழந்தவராக நடித்த படங்கள் திலீப்குமாரை உச்சம் தொட வழிவகுத்தன...

திரையில் காதல் காதல் காதல் என வளம் வந்தவர் நிஜவாழ்க்கையில் காதல் இளவரசனாக பயணப்பட்டார். 1950களில் நடிகை மதுபாலாவை காதலித்து, 7 ஆண்டுகாலம் இணைந்து வாழ்ந்தார். பின்னர் நடிகை வைஜெயந்தி மாலாவை காதலித்தார். சில ஆண்டுகளில் பிரிந்தார். 

44வது வயதில் 22 வயதான நடிகை சைரா பாணுவை காதலித்து கரம்பிடித்தார். அவருடன் இறுதி நிமிடம் வரை இணைபிரியாது இளமையுடன் வாழ்ந்தார்.

இந்தியாவிலேயே அதிக விருதுகள் வாங்கியவர் என்ற கின்னஸ் விருது... மாநிலங்களவை உறுப்பினராக சிறப்பு பதவி. 
தாதாசாகெப் பால்கே விருது என பல பெருமைக்கு சொந்தக்காரரான திலீப்குமார் 1998ஆம் ஆண்டு திரையுலகில் இருந்து ஓய்வு பெற்றார். 

கடந்த 30 ஆம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டு மும்பை சிகிச்சை பெற்று வந்த திலீப்குமார், புதன்கிழமை காலை காலமானார்...

உயிர் உலகை பிரிந்தாலும், திலீப்குமாரின் ஆன்மா, சினிமா என்ற மொழியின் மூலம் நூற்றாண்டுகளை கடந்து நிலைத்திருக்கும்...

Next Story

மேலும் செய்திகள்