அகிலமெங்கும் இசையாய் நிறைந்த எம்.எஸ்.வி... கவியாய்க் கலந்த கண்ணதாசன்... 2 இமயங்களுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள்!

உலகெங்கும் வாழும் தமிழர்களின் அன்றாடங்களில் இசையாகவும், கவியாகவும் நிறைந்திருக்கும் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும், கவியரசு கண்ணதாசனுக்கும் இன்று ஒரே நாளில் பிறந்த நாள்... இது பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...
அகிலமெங்கும் இசையாய் நிறைந்த எம்.எஸ்.வி... கவியாய்க் கலந்த கண்ணதாசன்... 2 இமயங்களுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள்!
x
உலகெங்கும் வாழும் தமிழர்களின் அன்றாடங்களில் இசையாகவும், கவியாகவும் நிறைந்திருக்கும் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும், கவியரசு கண்ணதாசனுக்கும் இன்று ஒரே நாளில் பிறந்த நாள்... இது பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

தாளத்தில் சேரும் வார்த்தைகளின் மாயத்தால் கவிதைகள் காவியமாகின்றன, ராகத்தில் இழையும் மொழியின் இனிமையால் பாடல்கள் அமுதமாகின்றன...

மனிதர்களின் எல்லா உணர்வுகளுக்கும் வடிகாலாக பாடல்களை தந்தவர்கள் எம்.எஸ்.வியும், கண்ணதாசனும்... இந்த கூட்டணியில் எல்லா உணர்வுகளுக்கும் ஓர் பாடல் உண்டு...

இவர்கள் கைக்கோர்த்தால் சாதாரண காதல் பாடலும் சாகா வரம் பெறும்...

நட்பு நாட்களின் இனிமையைக் கொண்டாட ஒரு பாடல்...

இழந்த நட்புகளின் ஈரத்தை நினைவில் நீந்த விட இன்னொரு பாடல்... 

வாழ்வில் நம்பிக்கை தேய தொடங்கும் நேரத்தில் கூட இவர்கள் பாடல்களை கேட்டால் புது தெம்பு பிறக்கும்...

இவ்வளவு ஏன்.. தான் மிகவும் சோர்ந்து போன போது தன்னை வாழ தூண்டியது மயக்கமா கலக்கமா பாடல்தான் என குறிப்பிட்டிருக்கிறார் கவிஞர் வாலி...

சோர்ந்து போன மனம் மீண்டு எழ நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற பாடலே போதுமானது...

மனித மனங்களுக்குள் எழும் மிக நுண்ணிய எண்ணப் போராட்டங்களை கூட பாடலாக்கியவர்கள் எம்.எஸ்.வியும், கண்ணதாசனும்...

சோகங்களின் கனத்தை மறக்கடிக்கவும், தோல்விகளில் ஆறுதல் அளிக்கவும் இன்றும் மருந்தாகுபவை இவர்களின் பாடல்கள் தான்...

நட்பு, காதலோடு, பக்திப் பாடல்களையும் அழகு தமிழில் அள்ளித் தந்தது இந்த கூட்டணி...

கர்ணனுக்காக கண்ணன் வருந்தும் பாடலொன்று, எம்.எஸ்.வி - கண்ணதாசன் இன்றி சாத்தியமேயில்லை என்று தான் சொல்ல வேண்டும்..

இசையா? கவியா ? என்ற மோதல் வரும் வேளையில் இரண்டறக் கலந்து இனிமை சேர்த்தக் கூட்டணி இது...

எதார்த்த மொழியில் இலக்கியத்தை பாடலாக்கியவர்கள் எம்.எஸ்.வியும் கண்னதாசனும்தான்...

எம்.எஸ்.வி கண்ணதாசனின் சிறப்பை சொல்ல ஆயிரம் பாடல்கள் இருந்தாலும் கூட, இன்று வரை கோடிக்கணக்கான தமிழ் இல்லங்களில் தாலாட்டாய் ஒலிக்கும் ஒற்றை பாடல் காலம் உள்ள வரை இவர்கள் புகழை தாங்கி நிற்கும்... 


Next Story

மேலும் செய்திகள்