விஜய்யின் புதிய படத்தின் பெயர் "பீஸ்ட்" - படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியீடு

தளபதி 65 என்ற பெயரில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வந்த புதிய படத்திற்கு பீஸ்ட் என பெயரிடப்பட்டுள்ளது.
x
தளபதி 65 என்ற பெயரில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வந்த புதிய படத்திற்கு பீஸ்ட் என பெயரிடப்பட்டுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையில் தயாராகி வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. இன்று நெல்சன் தீலிப்குமாரின் பிறந்தநாள் மற்றும் நாளை விஜய்யின் பிறந்த நாள் என்பதால், படத்தின் பெயருடன், பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நிறைவடைந்த நிலையில், விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 




Next Story

மேலும் செய்திகள்