பிரபல கன்னட நடிகர் சஞ்சாரி விஜய் மறைவு- உடல் உறுப்புகளை தானமாக தந்த குடும்பத்தினர்
பதிவு : ஜூன் 15, 2021, 08:26 PM
சாலை விபத்தில் சிக்கிய பிரபல கன்னட நடிகர் சஞ்சாரி விஜய் மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தார்.
 அவரது உடல் உறுப்புகளை குடும்பத்தினர் தானமாக வழங்கி உள்ளனர். தேசிய விருது வென்ற நடிகர் சஞ்சாரி விஜயின் மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  கன்னட திரை உலகிற்கு அத்திபூத்தாற்போல் கிடைத்த அபூர்வ துணை நடிகர்... தான் ஏற்கும் கதாபாத்திரங்களை அச்சுப் பிசகாமல் நடிப்பதில் வல்லவரான சஞ்சாரி விஜய், கன்னட திரை உலகின் முன்னணி துணை நடிகராக வலம் வந்தவர். ஆரம்பத்தில் சஞ்சாரி என்ற நாடகக் குழுவில் நடித்து வந்த இவரின் இயற்பெயர் விஜய் குமார் பசவராஜய்யா...தனது தொடர் முயற்சிகளால் கடந்த 2011-ஆம் ஆண்டு 'ரங்கப்பா ஹோக்பிட்னா' என்ற கன்னட படத்தின் வாயிலாக திரைத்துறையிலும் அடியெடுத்து வைத்தார் விஜய். திரைத்துறையில் அடியெடுத்து வைத்த பின்னர், தனது முன்னேற்றத்துக்கு துணை நின்ற சஞ்சாரி நாடகக் குழுவின் பெயரை, நன்றி மறவாமல் தனது பெயருக்கு முன்பாக இணைத்துக் கொண்டார். தசவாலா, கில்லிங் வீரப்பா, வர்த்தமானா மற்றும் சிப்பாயி என சுமார் 25 படங்களில் நடித்திருக்கும் சஞ்சாரி விஜய் 2014-ஆம் ஆண்டில் 'ஹரிவு' என்ற படம் மூலம் கதாநாயகன் அந்தஸ்தையும் பெற்றார். ஆனால், அவர் மீது புகழ் வெளிச்சம் பாய்ச்சிய படம், நானு அவனல்ல அவளு...கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில், திருநங்கை கதாபாத்திரத்தில் ரத்தமும் சதையுமாக நடித்து ஒரு திருநங்கையாகவே திரையில் வாழ்ந்திருப்பார் சஞ்சாரி விஜய்...சமூக ஆர்வலரும், திருநங்கையுமான லிவ்விங் ஸ்மைல் வித்யாவின் சுயசரிதையை தழுவி எடுக்கப்பட்ட இந்த படம், சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் அவருக்கு பெற்றுத் தந்தது. தேசிய விருது பெற்ற பின்னர், கன்னட திரை உலகின் முன்னணி நடிகராக மாறிய சஞ்சாரி விஜய், கொரோனா காலத்தில் தன்னால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்து வந்தார். இந்நிலையில், வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்க தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது துரதிர்ஷ்டவசமாக விபத்தில் சிக்கினார். ஹெல்மெட் அணியாததால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தார்.பிழைக்க வைக்க முடியாது என்று மருத்துவர்கள் கைவரித்த நிலையில், சஞ்சாரி விஜயின் உடல் உறுப்புகளை குடும்பத்தினர் தானமாக வழங்கி உள்ளனர். வெறும் 38 வயதில் உலகை விட்டுச் சென்று இருக்கிறார் சஞ்சாரி விஜய்.... கன்னட திரை உலகினர் இரங்கல் தெரிவித்து வரும் சூழலில், சஞ்சாரி விஜயின் இறுதிச்சடங்கை முழு அரசு மரியாதையுடன் செய்து கர்நாடக அரசு கவுரவித்து உள்ளது. தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

305 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

245 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

150 views

பிற செய்திகள்

சார்பட்டாவில் கலக்கியிருக்கும் பீடி தாத்தா.. சார்பட்டா பரம்பரையில் தொடங்கிய பயணம்

சார்பட்டாவில் கலக்கியிருக்கும் பீடி தாத்தா.. சார்பட்டா பரம்பரையில் தொடங்கிய பயணம்

410 views

ஆபாசப் பட தயாரித்து வெளியிட்ட விவகாரம்... ராஜ்குந்த்ரா அலுவலகத்தில் ரகசிய அலமாரி

ஆபாசப் பட தயாரித்து வெளியிட்ட விவகாரம்... ராஜ்குந்த்ரா அலுவலகத்தில் ரகசிய அலமாரி

16 views

இ.சி.ஆரில் கார் விபத்து : ஒரு பெண் உயிரிழப்பு - நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம்

சென்னை மாமல்லபுரம் அருகே நண்பர்களுடன் சென்ற நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்தானதில், அவரது தோழி உயிரிழந்தார். 3 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

51 views

விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் "எனிமி" படத்தின் 'டீசர்' வெளியீடு

விஷால், ஆரியா இணைந்து நடிக்கும் எனிமி(Enemy) படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

212 views

கொரோனா பாதிப்புக்கு மத்தியில் படப்பிடிப்பு.. படக்குழுவுடன் உள்ளூர் மக்கள் வாக்குவாதம்

கொரோனா பாதிப்புக்கு மத்தியில் படப்பிடிப்பு.. படக்குழுவுடன் உள்ளூர் மக்கள் வாக்குவாதம்

63 views

சார்பட்டா பரம்பரை படம் பேசும் அரசியல்? "எம்.ஜி.ஆர். குறித்து தவறாக சித்தரிப்பு" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

சார்பட்டா திரைப்படத்தில் அதிமுக குறித்து தவறாக சித்தரித்திருப்பதாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

49 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.